Delhi Capitals Head Coach Latest News Updates: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் (ICC T20 World Cup 2024) பரபரப்பு முடிந்த உடனேயே தற்போது சர்வதேச அளவில் ஆண்டர்சனின் ஓய்வு, அடுத்தாண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஏற்பாடுகள் என பல செய்திகள் தினந்தினம் வந்துகொண்டிருக்க 2025 ஐபிஎல் தொடர் (IPL 2025) குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை காலத்தில் நடைபெறும். அந்த வகையில், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மெகா ஏலம் இந்த முறையும் நடைபெற இருக்கிறது. 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் (IPL Mega Auction 2025) இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடத்தப்படலாம். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகிவில்லை.
ரிக்கி பாண்டிங் விலகல்
இருப்பினும் மெகா ஏலத்தின் விதிமுறைகள் மாற்றப்படுகிறதா, மெகா ஏலத்தை முன்னிட்டு அணிகளின் கட்டமைப்பில் நடைபெற உள்ள மாற்றங்கள் என பல தகவல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த 2024 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தற்போது இந்திய ஆடவர் சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதனால், கேகேஆர் முகாமிலும் மாற்றம் ஏற்பட உள்ளது.
மேலும் படிக்க | IND vs SL: இந்தியா - இலங்கை டி20 போட்டிகளில் முக்கிய மாற்றம்! பிசிசிஐ அறிவிப்பு!
தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 7 ஆண்டுகளாக செயலாற்றிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) தற்போது தனது பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் ரிக்கி பாண்டிங் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார்.
After 7 seasons, Delhi Capitals has decided to part ways with Ricky Ponting.
It's been a great journey, Coach! Thank you for everything pic.twitter.com/dnIE5QY6ac
— Delhi Capitals (@DelhiCapitals) July 13, 2024
இவர் பொறுப்பில் இருந்த போது, ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு அப்போது வயது 23 ஆகும். அந்த அணியில் கௌதம் கம்பீரும் இருந்தார். இருப்பினும் 2018இல் கடைசி இடத்தையே டெல்லி அணி பிடித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டில் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து பிளே ஆப் வரை சென்றிருந்த நிலையில், 2020இல் இறுதிப்போட்டிக்குச் சென்று தோற்றது.
அடுக்கடுக்கான புகார்கள்
2021ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் (Rishabh Pant) கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் முதலிடம் வந்தாலும் பிளே ஆப் சுற்றோடு டெல்லி வெளியேறியது. 2022இல் 5ஆவது இடத்தில் நிறைவு செய்த டெல்லி அணி, 2023இல் ரிஷப் பண்ட் இல்லாமல் 9ஆவது இடத்தோடு நிறைவு செய்தது. 2024 சீசனில் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்தும் அதிரடியாக விளையாடியும் 6ஆவது இடத்திலேயே நிறைவுசெய்தது.
தொடர்ந்து, டெல்லி அணி சொதப்பி வந்ததாலும்; முறையான பேக்-அப் வீரர்கள், மாற்று வீரர்கள் இல்லாததாலும் கடந்த சில வருடங்களாக அந்த அணியால் கோப்பைக்கு பக்கத்தில் கூட நெருங்க இயலவில்லை. ரிஷப் பண்ட் உள்ளிட்ட திறமையானவர்களை அடையாளம் கண்டிருந்தாலும் அதன்பின் பெரிய அளவில் இளம் திறமைகளை கண்டறியாத காரணத்தாலும் ரிக்கி பாண்டிங் மீது தொடர் புகார்கள் இருந்து வந்தன. இந்த நிலையில்தான் அவர் தனது பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.
புதிய தலைமை பயிற்சியாளர் யார்?
இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகரான சௌரவ் கங்குலி (Sourav Ganguly) அளித்த பேட்டியில்,"அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நான் திட்டமிட வேண்டும். டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பாக ஐபிஎல் தொடரை ஒருமுறையாவது வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். அடுத்த ஆண்டு மெகா ஏலம், அதனால் இப்போதில் இருந்தே திட்டமிடலை ஆரம்பித்துவிட்டேன்.
கடந்த 7 ஆண்டுகளில் பாண்டிங்கால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை என்று ஜெஃப்ரி பாய்காட் சொன்னதும் சரிதான். நான் அணி உரிமையாளர்களுடன் உரையாடி, இந்திய பயிற்சியாளர்களை முயற்சித்துப் பார்க்க அறிவுறுத்துவேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பேன். நான் எப்படி செயல்படுகிறேன் என்று பார்ப்போம். ஏலத்தில் சில புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும்" என்றார்.
ஐபிஎல் மெகா ஏலம் 2025
ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு அணிகள் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பழைய விதிமுறைகளின்படி பார்த்தால் டெல்லி அணியில் ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய இந்திய வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள். வெளிநாட்டு வீரர்களில்தான் அவர்களுக்கு பிரச்னை வரும். அதாவது, ஆஸ்திரேலிய வீரர் பிரேசர் மெக்கர்க்கா அல்லது தென்னாப்பிரிக்கா வீரர் ஸ்டப்ஸா என முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க | மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்? கம்பீர் எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ