உலக கோப்பை 2022 வெல்ல பிசிசிஐ போட்ட புதிய பிளான்! வெளியான அறிவிப்புகள்!

T20 Worldcup 2022: செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 4, 2022, 07:51 AM IST
  • இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா.
  • உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு நடைபெற உள்ளது.
  • தற்போது மேற்கிந்திய அணிகளுடன் டி20 போட்டியில் விளையாடி வருகிறது இந்திய அணி.
உலக கோப்பை 2022 வெல்ல பிசிசிஐ போட்ட புதிய பிளான்! வெளியான அறிவிப்புகள்! title=

இந்தியாவிற்கு வரும் செப்டம்பரில் ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வருகிறது.  அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இந்தியா வருகிறது.  ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதன்கிழமை அறிவித்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.  வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் உலக கோப்பை 2022 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

 

மேலும் படிக்க | ‘ஃபினிஷர்’னா யாருனு தெரியுமா.. தோனியைச் சீண்டினாரா ஸ்ரீகாந்த்?

மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 நடைபெற உள்ளது. நாக்பூர் மற்றும் ஐதராபாத் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகள் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இரண்டாவது டி20 அக்டோபர் 2ம் தேதியும், கடைசி போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது.  பின்னர் ஒருநாள் தொடர் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. ராஞ்சி மற்றும் டெல்லியில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.  

 

தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி.  இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.  இதற்கு இடையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது.  இந்நிலையில் உலக கோப்பையை மனதில் வைத்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளுடன் டி20 தொடர் நடைபெற உள்ளது.  இந்த தொடரின் முடிவுகள் உலக கோப்பை வெற்றியை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் உலக கோப்பை அணியும் இதன் மூலம் தெரிய வந்துவிடும்.

மேலும் படிக்க | IND vs WI: காயமடைந்த ரோகித் சர்மா: அடுத்த போட்டியில் விளையாடுவாரா? அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News