AFG v BAN: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி  டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 24, 2019, 02:55 PM IST
AFG v BAN: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு title=

14:49 24-06-2019
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து வங்காளதேச அணி பேட்டிங் செய்ய உள்ளது.

 

 


சவுத்தாம்ப்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். 

வங்காளதேச அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் அட்டவணையில் 6வது இடத்தில் உள்ளது. இனி நடைபெற உள்ள அனைத்து ஆட்டங்களிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இதுவரை  ஆப்கானிஸ்தான் அணி இதுவரை ஆடிய ஆறு ஆட்டங்களிலும் ஒரு வெற்றிக்கூட பெறவில்லை. இதுவரை 2019 உலக கோப்பையில் புள்ளி கணக்கை தொடங்காத ஒரே அணி ஆப்கானிஸ்தான் தான். அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியை அச்சுறுத்திய ஆப்கானிஸ்தான் அணி, இன்று பங்களாதேஷ் அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்றே தெரிகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 4 போட்டியில் வங்காளதேசமும், 3 போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான வெற்றி சதவிகிதம் பங்களாதேஷ் அணிக்கே அதிகம் உள்ளது

ஆப்கானிஸ்தான்: குல்படின் நைப் (கேப்டன்), இக்ரம் அலி கில், ஹஸ்ரத்துல்லா ஸசாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், அப்தாப் ஆலம், முஜீப் உர் ரஹ்மான், ஹமீத் ஹாசான் நூர் அலி சத்ரான்.

பங்களாதேஷ்: முஷ்பிகுர் ரஹீம், மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), தமீம் இக்பால், செளமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, சப்பீர் ரஹ்மான், மெஹிடி ஹசன், ரூபல் ஹொசைன், முஸ்தாபிஸூர் ரஹ்மான், முகமது மொபமட் ஜாய்புதீன்.

 

Trending News