ஊசலில் இருந்த பாகிஸ்தான்! தூக்கி நிறுத்திய கேப்டன் பாபர் அசாம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்திருக்கும் பாபர் அசாம், இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 26, 2022, 08:16 PM IST
  • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி
  • அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்
  • சதமடித்து அணியை மீட்ட பாகிஸ்தான் கேப்டன்
ஊசலில் இருந்த பாகிஸ்தான்! தூக்கி நிறுத்திய கேப்டன் பாபர் அசாம் title=

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், பார்ம் இல்லாமல் தவித்து வந்தார். அவரை விளாசி தள்ளிய அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் வேறு யாரையாவது கேப்டன் பொறுப்புக்கு நியமிக்கலாம் என்றெல்லாம் கருத்துகளை தெரிவிக்க தொடங்கினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு ஏற்பட்ட அதேநிலைமை தான் பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டனான பாபர் அசாமுக்கும். தொடர் தோல்வி, பார்ம் இல்லாதது என அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருந்த அவர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்றால் கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்படலாம் என்ற சூழலில் இருந்தார்.

மேலும் படிக்க | அம்மாடியோ! இத்தனை போட்டிகளா? 2023ல் இந்திய அணி விளையாடும் தொடர்கள்!

அதற்கேற்றார்போல் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியதால் 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் களத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கும் சர்ப்ராஸ் அகமதுவும் களத்தில் இருந்தனர். இருவருமே சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

பொறுப்பை உணர்ந்து கொண்ட இருவரும் சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். 5வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் இந்த ஜோடி குவித்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் சர்ப்ராஸ் அகமது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். மறுமுனையில் சதமடித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் களத்தில் இன்னும் இருக்கிறார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் எடுத்திருப்பதால் 2ம் நாளில் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | IND vs SL: முக்கிய வீரரை கழட்டிவிட பிசிசிஐ முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News