INDvsAUS; 2வது டெஸ்ட்: இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு; அஸ்வின், ரோகித் நீக்கம்

நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடக்க உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2018, 01:25 PM IST
INDvsAUS; 2வது டெஸ்ட்: இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு; அஸ்வின், ரோகித் நீக்கம் title=

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி டிசம்பர் 6-ஆம் நாள் காலை 5.30 மணியளவில் துவங்கியது இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்கிஸில், இந்தியாவை விட 15 ரன்கள் பின்தங்கிய நிலையில், 235 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

15 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்கள் குவித்தது. இதனால் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், நாளை இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இரண்டாது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா மற்றும் அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு காயம் ஏற்பட்டு உள்ளதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்திய அணி: முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்

 

அதேபோல இரண்டாது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆஸ்திரேலியா வீரர்களின் பட்டியலை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா: ஷேன் மார்ஷ், பீட்டர் ஹென்ட்ஸ்காப், டிராவிஸ் ஹெட், டிம் பெயின் (கேட்ச்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹாஸ்லேவுட், மிட்செல் மார்ஷ், பீட்டர் சிடில், கிறிஸ் டிரெமெய்ன்.

 

Trending News