உலக கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது இந்திய கிரிக்கெட் அணி...

மகளிர் t20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

Last Updated : Mar 8, 2020, 04:05 PM IST
உலக கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது இந்திய கிரிக்கெட் அணி... title=

மகளிர் t20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

மகளிர் t20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டி இன்று மெங்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் ஆஸ்திரேலியா முதில்ல பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 

ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக பெத் மூனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 78(54) ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் அல்சா ஹாலி அதிரடியாக விளையாடி 75(39) ரன்கள் குவித்தார். 

இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்உத 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழக்க துவங்கியது. ஆட்டத்தின் 19-1-வது பந்தில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்தியா 85 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையினை கைவிட்டது. அணியில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 33(35) ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மெகன் ஸ்காட்ச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெஸ் ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியாக இப்போட்டியில் இந்தியா அடித்து நொறுக்கப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியா அவர்களைத் துன்புறுத்தியுள்ளதுடன், தங்களது 5-வது டி20 உலகக் கோப்பை வென்றனர்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மகளிர் அணி 2010, 2012, 2014 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது. இந்நிலையில் தற்போது 5-வது முறையாக 2020-ஆம் ஆண்டு கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. தனது முதல் டி20 கோப்பையினை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய மகளிர் அணி இறுதியில் ரன்னர்-அப்பாக வெளியேறியது.

Trending News