Shani Budhan Transit 2024 : ஜூன் 29, 2024 அன்று மதியம், புதன், கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் வக்ரகதிக்குச் செல்கிறார்
Shani And Budhan Transit : சனி மற்றும் புதன் நிலைகளில் 12 மணி நேரத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள் 4 ராசிக்காரர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும்.
நவகிரகங்களின் இயக்கத்தின் வேகம் ஒன்றுடன் ஒன்று மாறுபடும். சில நேர்சுற்றில் சுற்றினால், சில வக்ர கதியில் நகரும். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்துக் கொண்டே இருக்கின்றன
புத்திகாரகர் புதன், நீதிக்காரகர் சனி இருவரும் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்
நீதிக்காரகரான சனீஸ்வரர், ஒருவரின் நன்மை தீமைகளை எடைபோட்டு அவர்களின் கர்மபலன்களை நிர்ணயம் செய்யும் நீதிபதியாக செயல்படுபவர்
புத்தி, அறிவு, கல்வி என ஒருவரின் அறிவார்ந்த பண்புகளுக்கு காரணமான புதனின் வலிமையே ஒருவரின் அந்தஸ்தாக மாறுகிறது
புதனும் சனியும் தங்கள் இயக்கத்தை மாற்றுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சனைகள் ஏற்படும்ம் செலவுகள் அதிகரிக்கும். சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்வதால் மனதில் கலக்கம் உண்டாகும். முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்கவும்.
உங்கள் உடல்நலம் மற்றும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள் பேசுங்கள். உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். செலவு அதிகரிக்கும் காலம் என்பதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள்
மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாம் சரியாகத் தோன்றினாலும் திடீரென்று ஏதேனும் ஒரு பிரச்சனை வரலாம். வருமானம் அதிகரிப்பது போல தெரிந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். கவனத்துடன் செலவு செய்யுங்கள். அநாவசியமாக உணர்ச்சிவசப்பட வேண்டாம்
ஜூன் 29க்குக் பிறகு அடுத்த சில நாட்கள் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு தங்கள் தொழிலில் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. சிலருக்கு நஷ்டம் ஏற்படலாம், கடன் வாங்க நேரிடலாம். பிரச்சனைகள் ஏற்பட்டால், பொறுமையாக இருங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது