எந்த பக்கம் திரும்பினாலும் அடி... பும்ராவை ஓடவிட்ட ஆஸ்திரேலியா - நொந்துபோன இந்தியா

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய அணி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பும்ரா ஓவரை டார்கெட் செய்து விளாசுகின்றனர் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள்  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 27, 2023, 03:53 PM IST
  • ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
  • அதிரடியாக விளையாடுகிறது
  • 7-க்கு குறையாத ரன்ரேட்
எந்த பக்கம் திரும்பினாலும் அடி... பும்ராவை ஓடவிட்ட ஆஸ்திரேலியா - நொந்துபோன இந்தியா title=

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரையும் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இருப்பினும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அந்த அணியை தோற்கடித்து ஓயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்திய அணி களமிறங்கியுள்ளது. பிளேயிங் லெவனை பொறுத்தவரை சுப்மான் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, பும்ரா ஆகியோர் ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் படிக்க | 16 ஆண்டுகள் யுவராஜ் கட்டிகாத்த சாதனை... ஒரே நாளில் ஊதித்தள்ளிய நேபாள் - எத்தனை ரெகார்டு பாருங்க!

டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

இந்தப் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனென்றால் ராஜ்கோட் இந்திய மைதானங்களிலேயே பேட்டிங் விளையாட சொர்க்க பூமி என அழைக்கப்படும் மைதானம். அதனால் டாஸ் வெற்றி பெற்றவுடன் முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு மெகா இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது. அதற்கேற்ப டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 

திக்கு முக்காடிய பும்ரா

குறிப்பாக இந்திய அணியின் ஸ்டார் பவுலரான பும்ராவின் பந்துவீச்சை களம் எட்டில் வைத்து பொளந்து எடுத்தனர் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ். குறிப்பாக மிட்செல் மார்ஷ், பும்ராவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து மிரள வைத்தார். ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பியிருப்பதால் அவர் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ராவின் ஓவரை ஆஸ்திரேலியா அடித்தது இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் என யார் பந்துவீச வந்தாலும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். 7 ரன்களுக்கும் குறையில்லாமல் ரன்ரேட் சென்று கொண்டிருக்கிறது. 

400 ரன்களை நோக்கி ஆஸ்திரேலியா

இதே நிலை கடைசி வரை நீடித்தால் ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை எளிதாக எட்டிவிடும். 31 ஓவர்கள் முடியும் வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் மார்ஷ் சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். 96 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் மார்ஷ். 

மேலும் படிக்க | Asian Games 2023: வெண்கலம் வென்றார் தமிழர்... யார் இந்த விஷ்ணு சரவணன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News