ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது!
ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் செப்டம்பர் 15-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 28-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.
இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டோயில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தின் 49.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து வங்கதேச அணி 261 ரன்கள் குவித்தது. வங்கதேச அணிதரப்பில் ரஹிம் 144(150), மித்துன் 63(63) ரன்கள் குவித்தனர். இலங்கை தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆட்டத்தின் 35.2-வது ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணியால் 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பெரேரா அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.