ஐபிஎல் ஏலத்தில் ஆர்யன் கான்! வைரலாகும் புகைப்படம்!

ஷாருக்கானின் குழந்தைகள் ஆர்யன் கான் மற்றும் சுஹானா கான் கேகேஆர் அணிக்காக ஐபிஎல் 2022 ஏலத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 12, 2022, 10:47 AM IST
  • கேகேஆர் அணி ஷாருகான் மற்றும் அவரது நடிகரும் நண்பர் ஜூஹி சாவ்லா ஆகியோருக்கு சொந்தமானது.
  • போதைப்பொருள் வழக்கிற்கு பிறகு ஆர்யனும் சுஹானாவும் முதல்முறையாக பொதுவெளியில் காணப்பட்டனர்.
ஐபிஎல் ஏலத்தில் ஆர்யன் கான்! வைரலாகும் புகைப்படம்! title=

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு முந்தைய கூட்டத்தில் ஆர்யன் கான் மற்றும் சுஹானா கான் கலந்து கொண்ட படங்கள் தற்போது வைரலாகியுள்ளன. இவர்கள் ஷாருகானிற்க்கு பதிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷாருகான் மற்றும் அவரது நடிகரும் நண்பர் ஜூஹி சாவ்லா ஆகியோருக்கு சொந்தமானது. ஐபிஎல் கூட்டத்தில் இருந்து வெளிவந்த படங்களில், ஆர்யன் மற்றும் சுஹானா KKRன் மற்ற நிர்வாக உறுப்பினர்களுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். ஆர்யன் வெள்ளை நிற உடையில் முகக்கவசம் அணிந்தபடியே இருந்தார்.  சுஹானா KKR லோகோவுடன் கூடிய முககவசத்தை அணிந்து இருந்தார்.   ஜூஹியின் மகள் ஜான்வி மேத்தாவும் மேஜையில் அமர்ந்திருந்தார். இந்த படம் ஐபிஎல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தை தவறவிடும் ப்ரீத்தி ஜிந்தா! அவரே சொன்ன தகவல்

ஆர்யனின் போதைப்பொருள் வழக்கிற்கு பிறகு ஆர்யனும் சுஹானாவும் முதல்முறையாக பொதுவெளியில் காணப்பட்டனர். கடந்த அக்டோபரில், கோவா செல்லும் கப்பலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஆர்யன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாட்டையே உலுக்கியது. ஷாருக்கின் மகன் ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு மாதம் நீதிமன்ற காவலில் இருந்தார். அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் NCB அலுவலகத்தில் தனது வருகையைக் குறிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இருப்பினும், அவருக்கு ஜாமீன் விதியிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டது.

சுஹானாவும் சமீபத்தில் மும்பைக்கு சென்றுவிட்டார். அவர் தனது உயர் கல்வியைத் தொடர சிறிது காலத்திற்கு நியூயார்க்கிற்குச் சென்றார். 21 வயதான அவர் சமீபத்தில் இயக்குனர் ஜோயா அக்தரின் அலுவலகத்திற்கு வெளியே காணப்பட்டார், விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளார். ஐபிஎல் ஏலத்தில் சுஹானா காணப்படுவது இதுவே முதல் முறை என்றாலும், கடந்த ஆண்டும் ஏலப் பொறுப்பை ஆர்யன் ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஜூஹியின் மகள் ஜான்வி மேத்தாவுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆர்யன் மற்றும் ஜான்வி ஆகியோர் தங்கள் பெற்றோரைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். 

மேலும் படிக்க | ஜாமீனில் விடுதலை ஆனார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News