கடந்த வெள்ளிக்கிழமை மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இடம் பெறும் வீரர்கள் உலக்கோப்பைக்கான இந்திய அணியின் ரேடாரில் இருப்பவர்கள் என யூகிக்கப்பட்டது. அதில் அர்ஷ்தீப் சிங்கும் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய பெயர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் இடம்பெறவில்லை. இதனால், அவருடைய இடம் இப்போதைக்கு கேள்விக்குறியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங் இடம் கேள்விக்குறி
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படவில்லை. அர்ஷ்தீப் சிங் 2022-ல் விளையாடிய T20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருந்தார். ODI உலகக் கோப்பைக்கான அணியிலும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | IND vs WI: ரோஹித்துக்கு பதில் இவரை கேப்டனாக போட்டிருக்கலாம்... ஹர்பஜன் போட்ட குண்டு!
கவாஸ்கர் நம்பிக்கை
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசும்போது, அர்ஷ்தீப் அணியில் தேர்வு செய்யப்படாதது அவருக்கு எங்காவது சாதகமாக இருக்கும். சில நேரங்களில் அணிக்கு வெளியே இருப்பதும் ஒரு வீரருக்கு நல்லது. அது அதிக விக்கெட்டுகளை வீழ்த்த உங்களை ஊக்குவிக்கும். ஒருவேளை அர்ஷ்தீப் செய்ய வேண்டியது இதுதான். தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தானாகவே அணியில் இடம்பிடிப்பார் என கூறினார். அர்ஷ்தீப் தற்போது இங்கிலாந்தின் கவுண்டி சீசனில் கென்ட் அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடி வருகிறார்.
இதுவரை அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் கடந்த ஆண்டு நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்தியாவுக்காக மொத்தம் 29 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அர்ஷ்தீப் சிங் மொத்தம் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏழு முதல்தர போட்டிகளில் 23.84 சராசரியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கென்ட் கவுண்டி அணியில் இணைந்த நான்காவது இந்திய வீரர் இவர். இதற்கு முன் குன்வர் ஷம்ஷேரா சிங், டிராவிட் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இந்த அணிக்காக விளையாடியுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ரிதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல் குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ