டிவிட்டரில் பொங்கிய பிவி சிந்து! காரணம் என்ன?

Last Updated : Nov 4, 2017, 04:45 PM IST
டிவிட்டரில் பொங்கிய பிவி சிந்து! காரணம் என்ன? title=

இண்டிகோ ஏர்வேஸ் நிறுவன ஊழியர் ஒருவர் மோசமாக நடந்துக்கொண்டதாக பிவி சிந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல பேட்மிண்டன் சாம்பியனான பிவி சிந்து இன்று காலை டெல்லியிலிருந்து மும்பை சென்றுள்ளார். அவர் சென்ற இண்டிகோ விமானத்தின் ஊழியர் ஒருவர் அவரை மிகவும் மோசமாக நடத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஊழியரின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில்,

விமான நிலைய பணியாளரான அஜீதேஷ் என்னிடம் மிக மோசமான மற்றும் கடுமையான முறையில் நடந்து கொண்டார்.  விமான பணிப்பெண் ஆசிமா அவரிடம் பயணியிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆனால், ஆசிமாவிடமும் அவர் கடுமையுடன் நடந்து கொண்டுள்ளார். இதுபோன்ற மக்கள் இண்டிகோ போன்ற ஒரு மதிப்பு நிறைந்த விமான நிறுவனத்தில் பணிபுரிவது அதன் மதிப்பினை அழித்துவிடும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இண்டிகோ நிறுவனம் நாங்கள் உங்களிடம் பேச விரும்புகிறோம் என டிவிட்டரில் சிந்துவிடம் தெரிவித்தது. ஆனால் சிந்து கோபமடைந்து, அங்கு என்ன நடந்தது என்பது எங்களுடன் இருந்த அஸிமா என்ற ஊழியருக்கு தெரியும். அவரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு விளக்குவார் என பதிலுக்கு பதிவிட்டுள்ளார்.

Trending News