இந்திய அணி 2020-21 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அப்போது, அங்கு இந்திய அணி சந்தித்த அவமானங்கள், விளையாடிய விதம் ஆகியவை ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 'பந்தே மே தா தும்'என்ற பெயரில் வெளியாகும் ஆவணப்படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உலகளவில் கிடைத்த கவுரவம்
2020 - 21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. குறிப்பாக, காபா டெஸ்ட் போட்டியில் சேஸிங் செய்து வெற்றியை இந்திய அணி தன்வசமாக்கியதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி அவமானங்களையும், தோல்விகளையும் கடந்து, வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரலாற்று சாதனை படைத்தது.
சிட்னி டெஸ்ட் போட்டியில் நிறவெறி சர்ச்சை எழுந்தது. முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த பார்வையாளர்கள் அவர்களை நிற ரீதியாக வசைபாடியதாக வீரர்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த ரசிகர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த சுற்றுப்பயணம் 'பந்தே மே தா தும்' ஆவணப்படமாக உருவாகியுள்ளது.
When everything was against them, they stood tall and showed the world their true grit, strength and determination.
Witness the story of the greatest fightback. The story behind India’s biggest triumph in Test history.#BandonMeinThaDum - The fight for India’s pride. pic.twitter.com/T6ilpxIbgH
— Voot Select (@VootSelect) June 1, 2022
ஆவணப்படத்தில் வெளியாகியிருக்கும் டீசரில் பேசியிருக்கும் ரஹானே இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். "முதலில் முகமது சிராஜ் தன்னிடம் வந்து கூறினார். பின்னர் பும்ராவும் கூறியதையடுத்து நடுவரிடம் இதுகுறித்து முறையிட்டேன். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். அதுவரை விளையாடமாட்டோம் என கூறினேன். ஆனால், நடுவர்கள் போட்டியை நிறுத்த முடியாது, வேண்டுமானால் வெளியேறுங்கள் என கூறினர்.
அதற்கு நான் டிரஸ்ஸிங் ரூமில் உட்கார வரவில்லை. விளையாட வந்துள்ளோம் என விடாப்பிடியாக கூறிவிட்டேன். சிட்னியில் நடந்த விஷயம் என்பது துருதிஷ்டவசமானது. அப்படி நடந்திருக்கக்கூடாது" எனத் தெரிவித்தார். அஸ்வின் பேசும்போது "ஒரு வீரராக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மறக்க முடியாத பல அனுபவங்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். பல கசப்பான விஷயங்கள் இருந்தபோதும் ஹனுமா விஹாரியுடன் சேர்ந்து இரண்டரை மணிநேரம் நான் களத்தில் இருந்தேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளோம். இதைவிட பெரியவிஷயம் என்னவாக இருக்க முடியும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | T20 World Cup: ரோகித் சர்மா - விராட் கோலிக்கு இடமில்லையா? - புது டிவிஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR