doping: தடை ஓட்ட வீராங்கனை டோபி அமுசன் மீதான ஊக்கமருந்து தடை நீங்கியது!

Anti-Doping Rule Violation Cleared: நைஜீரிய விளையாட்டு வீராங்கனை டோபி அமுசன், ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள் எதையும் மீறவில்லை என்று ஒரு ஒழுங்குமுறை தீர்ப்பாயக் குழு முடிவு செய்தது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2023, 07:02 AM IST
  • டோபி அமுசனுக்கு கிடைத்தது நீதி
  • தடை ஓட்ட வீராங்கனை டோபி அமுசன் மீதான ஊக்கமருந்து தடை நீங்கியது
  • உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் களம் இறங்க தயாரானார் டோபி அமுசன்
doping: தடை ஓட்ட வீராங்கனை டோபி அமுசன் மீதான ஊக்கமருந்து தடை நீங்கியது! title=

கென்யா: பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் உலக சாதனை படைத்த டோபி அமுசன், ஊக்கமருந்து பயன்படுத்தியதான குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்டிருந்தார். அந்தத் தடை தற்காலிகமானதாக இருந்தது. தற்போது விசாரணை முடிந்த நிலையில், அவர் மீதான தற்காலிகத் தடை உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு (AIU) வியாழக்கிழமை (2023 ஆகஸ்ட் 17) தெரிவித்துள்ளது.

நைஜீரிய விளையாட்டு வீராங்கனை டோபி அமுசன், ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள் எதையும் மீறவில்லை என்று ஒரு ஒழுங்குமுறை தீர்ப்பாயக் குழு முடிவு செய்தது. 12 மாத காலத்திற்குள் மூன்று மருந்து சோதனைகளில் அவர் தேர்ச்சி பெற்றாரா என்ற கேள்வியின் அடிப்படையில் அவர் "எங்கே தோல்வி" அடைந்திருக்கலாம் என்று, தடகள ஒருமைப்பாடு அலகு (Athletics Integrity Unit (AIU))கடந்த மாதம் அமுசனை தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.

உலக தடகள ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின் கீழ், 12 மாதங்களில் மூன்று ஊக்கமருந்து சோதனைகளில் தோல்வியுற்றால், ஒரு விளையாட்டு வீரரோ அல்லது வீராங்கனையோ இரண்டு ஆண்டுகள் வரை விளையாடுவதில் இருந்து தடை செய்யப்படுவார்.  

மேலும் படிக்க | இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பில்லை...? - வேகத்திற்கு இனி வேற வீரர் தான்!

26 வயதான டோபி அமுசன், 2022 ஆம் ஆண்டு ஓரிகானின் யூஜினில் 12.12 வினாடிகளில் ஓடி, தடகளப் போட்டியில் முதல் நைஜீரிய உலக சாம்பியன் ஆவர். டோபி அமுசன்,  12.12 வினாடிகளில் ஓடி இலக்கை அடைந்து உலக சாதனை படைத்தவர் ஆனார்.

100 மீட்டர் தடை ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற நைஜீரிய தடகள வீராங்கனை டோபி, 100 மீ தடை ஓட்டத்தில் தற்போதைய உலக , காமன்வெல்த் மற்றும் ஆப்பிரிக்க சாம்பியனாவார் , அமுசன் 2022 உலக சாம்பியன்ஷிப் 100 மீ தடை ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்ற சாதனை இதுவரை தொடர்கிறது. அதன்பிறகு, அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.

மேலும் படிக்க | ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய கிரிக்கெட்டர் மார்லன் சாமுவேல்ஸ்! தண்டனை என்ன தெரியுமா?

100 மீட்டர் தடை ஓட்டத்தில் தற்போதைய டயமண்ட் லீக் சாம்பியனும் ஆன டோபி அமுசன் 2022 மற்றும் 2023 இல் பட்டங்களை வென்றார். 2015 ஆம் ஆண்டில், அமுசன் ஆப்பிரிக்க ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 100 மீ தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார் , அதே ஆண்டு, 18 வயதில், ஆப்பிரிக்க விளையாட்டுப் போட்டிகளில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார்.

2021 ஆம் ஆண்டில், அமுசன் 100 மீ போட்டியில், கோப்பையை வென்றதன் மூலம் டயமண்ட் லீக் பட்டத்தை வென்ற முதல் நைஜீரிய தடகள வீராங்கனை ஆனபோது, அவர் குளோரி அலோசியின் அப்போதைய ஆப்பிரிக்க சாதனையை முறியடித்தார்.

ஜூலை 16, 2023 அன்று, சிலேசியா டயமண்ட் லீக் சந்திப்பில் 100 மீ தடை ஓட்டத்தில் அமுசன் 12.34 வினாடிகளில் ஒரு புதிய சீசனில் சிறந்த இடத்தைப் பிடித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அமுசன் மூன்று ஊக்கமருந்து எதிர்ப்புக் கட்டுப்பாடுகளை தவறவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால், தான் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என்று தன் மீதான குற்றச்சாட்டுகளை டோபி அமுசன் உறுதியாக மறுத்துவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த் டோபி அமுசன், ஆகஸ்ட் மாதம் உலக சாம்பியன்ஷிப் தொடங்குவதற்கு முன் இந்த வழக்கை 3 நடுவர்கள் கொண்ட தீர்ப்பாயம் தீர்த்துவிடும் என்று நம்பினார். அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை.

மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு ஆப்பு வைக்கிறாரா ஜிதேஷ் சர்மா? டீம் இண்டியா என்ன செய்யும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News