தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடையும் நிலையில் ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்னுக்குச் செல்லும் தனிப்பட்ட சார்டர் விமானங்களில் (charter flights) பயணித்தவர்ளுக்கு COVID-19 இருப்பது சோதனைகளில் தெரியவந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து சில வீரர்கள் புகார் அளித்தனர், மேலும் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யும் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் போட்டி விதிமுறைகளில் மாற்றங்கள் தேவை என்று கேட்டுக் கொண்டிருந்தார். இது சர்ச்சையை எழுப்பியது.
Also Read | IPL 2021 ஏலம் பிப்ரவரி 18 அன்று சென்னையில்
கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ’தனிமைப்படுத்தல்’ (quarantine) காலம் முடிவுக்கு வருவதால், உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் அமைதியாக இருந்த இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, மீண்டும் பரபரப்பான கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். பிப்ரவரி 8 முதல் 21 வரை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.
பெரும்பாலான வீரர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட 14 நாள் காலம் வியாழக்கிழமை பிற்பகுதியில் முடிவடையும். செரீனா வில்லியம்ஸ் (Serena Williams) மற்றும் ரஃபேல் நடால் ( Rafael Nadal) ஆகியோர் இந்த தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
"மூன்று வயது மகள் ஒலிம்பியாவுடன் தனிமைப்படுத்தல் என்பது நிச்சயமாக கடினமானது தான், ஆனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால் அது பாராட்டுதலுக்கு உரியது" என்று தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் செரீனா தெரிவித்தார்.
Also Read | சௌரவ் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சர்வதேச டென்னிஸ் வீரர்கள் 'உலகில் என்ன நடக்கிறது என்பதை பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்' என்று நடால் (Nadal) கருத்து தெரிவித்திருக்கிறார். சார்டர் விமானத்தில் வந்தவர்களில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், அவர்களுடன் தொடர்பு கொண்ட 72 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 24 மணிநேரமும் தங்கள் அறைகளில் தங்க வேண்டும் என்றும் டென்னிஸ் பயிற்சியில் கூட ஈடுபட அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்த 72 பேருக்கும் நடால் அனுதாபம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, உலகின் சிறந்த எட்டு வீரர்கள் வெள்ளிக்கிழமை அடிலெய்ட் கண்காட்சியில் (Adelaide exhibition) பங்கேற்பார்கள். நடால் மற்றும் யுஎஸ் ஓபன் சாம்பியனான டொமினிக் தீம் ஒருவரையொருவர் எதிர்கொள்வார்கள்.
முதலிடத்தில் உள்ள ஆஷ் பார்ட்டி (Ash Barty) இரவு அமர்வில் சிமோனா ஹாலெப் (Simona Halep) மோதுகின்றர்னர். 11 மாதங்களுக்குப் பிறகு Ash Barty போட்டிகளில் பங்கேற்கிறார்.
Also Read | சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR