எனது ஆரம்பகால கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் இருந்தேன். பின்பு தான் ஸ்பின்னர் ஆனேன் என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்த (Varun Chakravarthy).
மர்ம சுழற்பந்துவீச்சாளர் என்று அழைக்கப்படும் வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். "போட்டி ஆரம்பிப்பதற்கு முந்திய நாள் நான் தூங்கவே இல்லை. இது என்னுடைய மிகப்பெரிய கனவு. என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ளேன்" என்று தனது முதல் சீரியஸ் பற்றிய அனுபவத்தை தெரிவித்துள்ளார் வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy).
ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான என்னுடைய முதல் டி20 போட்டிக்கு முந்தைய நாள் என்னுடைய மெண்டர் ஆன தினேஷ் கார்த்திக்கை அழைத்து பேசினேன். அவருடைய அனுபவத்தில் இருந்து எங்கிருந்து எப்படி பவுலிங் செய்ய வேண்டும் போன்ற சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். இது எனக்கு போட்டியில் உபயோகமாக இருந்தது என்று கூறினார். நீங்கள் விக்கெட் எடுத்ததும் அதிகமாக மகிழ்ச்சி அடைவதில்லை என்ற கேள்விக்கு, என் பந்துகளில் சிக்சர்கள் பறக்கும்போது மகிழ்ச்சி அடைவதில்லை, பின் விக்கெட் எடுக்கும் போது மட்டும் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் இன்று பதில் அளித்தார். ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் போன்ற போட்டிகளில் விளையாடிய பின் தற்போது பௌலிங் போடுவதற்கும் தயாராக உள்ளேன். இந்தப் போட்டிகளில் விளையாடி அனுபவத்தால் தற்போது என்னால் டெத் ஓவர் மற்றும் பவர் பிளேகளிள் கூட தைரியமாக பந்துவீச முடியும் என்று கூறினார்.
ALSO READ IPL 2021 புதுமையான ஹேர் ஸ்டைல்: ஸ்டைலில் கலக்கும் தல தோனி
விஜய்யின் தீவிர ரசிகரான வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஜயை சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe