IPL auction 2022: அஃப்ரிடி ஐபிஎல்லில் விளையாடினால் அவர் விலை 200 கோடி ரூபாயா?

அஃப்ரிடி ஐபிஎல்லில் ரூ 200 கோடி சம்பாதித்திருப்பார் என்று கணிப்பு வெளியிட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2022, 11:09 AM IST
  • அஃப்ரிடி ஐபிஎல்லில் விளையாடினால் அவர் விலை என்ன?
  • 200 கோடி ரூபாய்க்கு அப்ரிடியை யார் வாங்குவார்கள்?
  • பிரியாணியே தான் வேணுமா?
IPL auction 2022: அஃப்ரிடி ஐபிஎல்லில் விளையாடினால் அவர் விலை 200 கோடி ரூபாயா? title=

அஃப்ரிடி ஐபிஎல்லில் ரூ 200 கோடி சம்பாதித்திருப்பார் என்று கணிப்பு வெளியிட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL mega auction) 2022 மெகா ஏலத்தில் பத்து அணிகளும் உலகெங்கிலும் உள்ள சிறந்த வீரர்களின் மீது பணத்தை வாரி இறைத்தன. 204 வீரர்களை, இந்த பத்து அணிகளும் வாங்க செலவானத் தொகை சுமார் 552 கோடி ரூபாய் ஆகும்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சில முன்னணி வீரர்கள் இந்த ஆண்டு ஐபில்  (The Indian Premier League) போட்டிகளில் விளையாட ஐபிஎல் உரிமையாளர்களுடன் ஒப்பந்தங்களைப் பெற்றதற்கு கிடைத்த சம்பளம் தான் ஏலத்தொகை.

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் அதிக சம்பள உயர்வு பெற்ற 5 வீரர்கள்

ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் அசத்தலான ஒப்பந்தங்களைப் பெற்றதைக் கண்ட பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட கணிப்பு வைரலானது. அவரை பலரும் ட்ரோல் செய்தனர்.  

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றிருந்தால் ரூ. 200 கோடி (INR 2 பில்லியன்) சம்பாதித்திருப்பார் என்று பத்திரிகையாளர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள முன்னணி வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையிலான கிரிக்கெட் உறவுகளில் இருக்கும் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. 

2013 முதல் இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட்டில் (bilateral cricket) விளையாடவில்லை மற்றும் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2022 ஏலத்தில் அணி மாறிய டாப் கிரிக்கெட்டர்கள்

"ஷாஹீன் ஷா அப்ரிடி IPL ஏலத்தில் இருந்திருந்தால், அவர் 200 கோடிக்கு போயிருப்பார்" என்று பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் ட்வீட்டுக்கு வந்த எதிர்வினைகள் அவரை வறுத்தெடுத்துவிட்டன. பேசாம, அப்ரிடியை உலக வங்கிக்கு குடுத்து, நாட்டோட கடனை அடைச்சிடலாமே! என்கிற ரேஞ்சுக்கு கலாய்க்கப்பட்டார் பத்திரிக்கையாளர்.

ஆன்லைனில் கிரிக்கெட் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்ட பாகிஸ்தான் பத்திரிகையாளர், தற்போது சமூக ஊடகங்களில் பலராலும் வறுத்தெடுக்கப்பட்டே, பிரபலமாகிவிட்டார். 

பந்திக்கே கூப்பிடலை, ஆனா பிரியாணி தான் வேணுன்னு அடம் பிடிச்சா எப்படி? என்கிற ரேஞ்சுக்கு கலாய்ப்புகள் களைகட்டுகின்றன.

அஃப்ரிடி தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தாலும், அவருக்கு ரூ. 200 கோடி (INR 2 பில்லியன்) ஒப்பந்தம் வழங்குவது என்பது டூ மச் இல்ல த்ரீ மச் என்று கலாய்க்கும் ரசிகர்களின் ட்ரோல்களைப் பார்த்தால், அஃப்ரிடியே, ‘என்னை வச்சு செஞ்சுட்டாங்களே’ என்று தலையில் அடித்துக் கொள்ளக்கூடும். 

பாகிஸ்தான் பத்திரிகையாளரின் அபத்தமான கூற்றுக்கு நெட்டிசன்களின் பதிலடி பவுன்சர்கள் அனைவரையும் கலகலக்க வைத்துவிட்டது.  

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் 2022: ஒரு நல்ல சமையல்காரனாக விரும்புகிறேன் - சுரேஷ் ரெய்னா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News