பக்ரீத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டை ஆட்டையப் போட்ட கும்பல்- பாக்., வீரர் கம்ரன் அக்மல் வீட்டில் கைவரிசை!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்  வீரர் கம்ரன் அக்மல் வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடு மர்ம நபர்களால் திருட்டு.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 9, 2022, 06:47 PM IST
  • பக்ரீத் பண்டிகை உலகம் முழுக்கக் கொண்டாடப்படவுள்ளது
  • கம்ரன் அக்மல் வீட்டில் 6 ஆடுகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தன
  • விலையுயர்ந்த ஆடு ஒன்று மர்ம நபர்களால் திருட்டு
பக்ரீத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டை ஆட்டையப் போட்ட கும்பல்- பாக்., வீரர் கம்ரன் அக்மல் வீட்டில் கைவரிசை! title=

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பக்ரீத்துக்காக வாங்கி வைத்திருந்த ஆடு திருட்டுப் போயுள்ளது.

பக்ரீத் பண்டிகை உலகம் முழுக்கக் கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வைத்திருப்பார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ஆறு ஆடுகளை வாங்கியுள்ளனர்.

ஆடுகளை வீட்டின் வெளியே உள்ள தொழுவத்தில் வைத்து அவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்க ஒரு உதவியாளரையும் வைத்துள்ளனர். 

இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அக்மல் வீட்டில் கைவரிசை காட்டியுள்ளனர். அதாவது பக்ரீத்துக்காக வாங்கி வைத்திருந்த விலை உயர்ந்த ஆடுகளுள் ஒன்றை  மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | தோனியுடன் மீண்டும் வெடித்த மோதல்? CSKவிலிருந்தே ஒட்டுமொத்தமாக விலகுகிறார் ஜடேஜா?

 

ஆட்டை பராமரிக்கும் உதவியாளர் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த நேரம் பார்த்து திருடர்கள் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதையடுத்து அக்மலின் தந்தை இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். 

திருடுபோன ஆட்டின் மதிப்பு சுமார் ரூ.90,000 எனக் கூறப்படுகிறது. விலை உயர்ந்த ஆட்டைத் தூக்கிச் சென்ற நபர்களைப் பிடித்து ஆட்டை மீட்டுத் தருவோம் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவு- புதிய புகைப்படங்களை ரிலீஸ் செய்த விக்கி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News