8 போட்டியில் 3 சதம்; ஒரு இரட்டை சதம்; கலக்கும் மயங்க் அகர்வால்..

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவர் 150 ரன்களுக்கு மேல் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 15, 2019, 02:01 PM IST
8 போட்டியில் 3 சதம்; ஒரு இரட்டை சதம்; கலக்கும் மயங்க் அகர்வால்.. title=

இந்தூர்: வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி ஆடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரரான மயங்க அகர்வால் தொடர்ந்து நிதானமாகவும், நன்றாகவும் ஆடி வருகிறார். அவரின் ஆட்டத்தால் இந்தியாவுக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்கிறது. அவருக்கு பின்னால் ஆட வரும் வீரர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் ஆடும் சூழ்நிலையை தருகிறது. ஆம், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். தற்போது, அவர் எட்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இதில் மூன்று சதத்தை அடுத்துள்ளர். அதில் ஒன்று இரட்டை சதமாகும். அந்த இரட்டை சதம் தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் ஆடிய ஆட்டத்தில் அடித்தார். மேலும் அந்த அணிக்கு எதிராக ஒரு சத்தமும் அடித்தார். 

அதாவது தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிராக இரண்டு சதமும், வங்கதேச அணிக்கு எதிராக ஒரு சதமும் எடுத்துள்ளார். அதேபோல மூன்று அறைசதமும் அடித்துள்ளார். இவரின் அதிகபட்ச ரன்கள் 215 ஆகும். தற்போதைய நிலவரப்படி, இவரின் சராசரி 66.36 ஆகும். இதுவரை அவர் டெஸ்ட் போட்டியில் 730 ரன்கள் எடுத்துள்ளார்.

 

வங்கதேசம vs இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் ஆரம்பமான இத்தொடரின் முதல் போட்டி இந்தூர் மைதானத்தில் ஆரம்பமானது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் வீச்சு தேர்வு செய்தது. களம் இறங்கிய வங்கதேச அணி வீரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆட்டத்தின் 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.

 

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 78 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. தொடக்க வீரர் மயங்க அகர்வால் சதத்தை பூர்த்தி செய்து தொடர்ந்து ஆடி வருகிறார். தற்போது மயங்க் அகர்வால்* 152(238) மற்றும் அஜின்கியா ரஹானே* 69(144) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். 

 

தற்போதை நிலவரப்படி இந்தியா வங்கதேச அணியை விட 137 ரன்கள் அதிகமாக எடுத்து உள்ளது. 7 விக்கெட் இந்தியாவின் கையில் இருக்கும் நிலையில், ஒரு வலுவான இலக்கினை வங்கதேச அணிக்கு இந்தியா நிர்ணயிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 6(14) ரன்களுக்கு வெளியேறினார். இந்திய கேப்டன் விராட் கோலி ரன் எடுத்தும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து புஜாரா 54(72) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

Trending News