இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வான்கடேயில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 255 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா 39 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 255 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. ஆரோன் பிஞ்ச் 110 ரன்னுடனும், டேவிட் வார்னர் 128 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.