வரும் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம். 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்களாக இருக்கும்.. சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். துலாம், கும்பம், மீனம் உட்பட 6 ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் வாராந்திர ராசிபலன்
ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 11 வரையிலான காலம் 6 ராசிக்காரர்களுக்கு நல்லதாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்தைப் பெறும் இந்த ராசிகளுக்கு வரும் வாரம் பல நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
மேஷம்: நிதி விஷயங்களில் நல்ல நேரமாக இருக்கும் இந்த வாரம், வீட்டைப் புதுப்பிக்க பணம் செலவழிக்கலாம். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் வாரம் இது
ரிஷபம்: பங்குச் சந்தையில் நல்ல லாபம் பெறும் வாய்ப்புகள் ரிஷப ராசியினருக்கு உண்டு. கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலையும் வரலாம். தெய்வ வழிபாடு நல்லது.
மிதுனம்: வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் இது. ஆனால் ஆடம்பரத்திற்காக பணம் செலவழிப்பதை கட்டுப்படுத்தவும். பணமுடை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அநாவசிய செலவுகள் வீடு தேடி வரும். எனவே, நன்கொடை போன்ற அற காரியங்களுக்கு செலவழித்து விடலாம்.
மேலும் படிக்க | ஆடியில் ஆலகால விஷம் அருந்திய நீலகண்டன் சிவனுக்கு காவடி! கங்கை நீரால் அபிஷேகம்!!
கடகம்: முதலீடு செய்து வைத்திருந்த பணம், தற்போது நல்ல பலனைக் கொடுக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். ஈடுபடும் காரியங்களில் வெற்றி வாய்ப்பு நிச்சயம். பயணங்கள் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் தரும், ஆனால் அதற்கு அதிகமாக பணம் செலவழிக்க நேரிடும்.
சிம்மம்: வருமானத்தில் சட்டென்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் ஈடுப்பட்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய முயற்சி எதையும் எடுப்பதைத் தவிர்க்கவும்.
கன்னி: வங்கித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு முன்னேற்றமாக இருக்கும் இந்த வாரத்தில், கடனாக கொடுத்த பணத்தை திரும்பப்பெறும் வாய்ப்பு உண்டு. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
துலாம்: தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். வெளியூர் பயணங்களுக்கு பணம் செலவழிக்க நேரிடும், ஆனால் பணம் என்பது செலவழிக்கத்தானே என்ற மனோபாவம் வந்துவிடும்.
விருச்சிகம்: புதிய வாகனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் அதிகம். உணவு தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான நேரம். அரசு அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
மேலும் படிக்க | ஆடியில் மட்டுமல்ல, எப்போதுமே அகோரிகள் தப்பு செய்தால் தண்டனையும் அகோரம்!
தனுசு: கடன் அன்பை முறிக்கும் என்ற பழமொழி உங்களுக்கானது தான் தனுசு ராசியினரே. கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பண பிரச்சனையில் இருந்து விடுபடும் காலம் இது. பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் காலம் இது.
மகரம்: வியாபாரத்தில் கவனக்குறைவாக இருந்தால் அது நட்டத்தை ஏற்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரில் யாராவது ஒருவரின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவிட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
கும்பம்: பங்குச்சந்தை மூலம் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம் என்பதால் பணத்தை கையாளும்போது கவனமாக இருக்கவும். வீண்விரயங்களைத் தடுக்க ரொக்கப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
மீனம்: ஆடம்பரத்திற்காக பணம் செலவழிப்பீர்கள். உங்களுக்கே விருப்பம் இல்லாவிட்டாலும், ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். எனவே சுப காரியங்களுக்கு பணத்தை செலவிட்டுவிடுங்கள். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ