Weekly Horoscope Oct 10-16: வார ராசிபலன்! துலாம் முதல் 6 ராசிகளுக்கான பலன்கள்

Weekly Horoscope: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் வார ராசி பலனை தெரிந்து கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2022, 11:29 AM IST
  • மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்
  • தனுசு ராசியினரின் பணிச்சுமை அதிகரிக்கும்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான வாரம்
Weekly Horoscope Oct 10-16: வார ராசிபலன்! துலாம் முதல் 6 ராசிகளுக்கான பலன்கள் title=

வார ராசிபலன்: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. அக்டோபர் 10 முதல் 16 வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். புரட்டாசி மாதத்தின் கடைசி வாரமான இது அனைவருக்கும் முக்கியமானது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாக வரும் வாரத்தின் பலன்கள் இவை. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் வார ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

துலாம் - இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். நல்ல செய்தி கிடைக்கும் அருமையான வாரம் இது. ஆனால் வாயைக் கட்டுப்படுத்துவது நல்லது. . துர்க்கையின் சிறப்பு அருள் உங்கள் மீது நீடித்து நிலைத்திருக்கும். திருமணத் தடை இருப்பவர்கள், பரிகாரம் செய்ய ஏற்ற வாரம் இது. இறையருள் கிடைக்கும் இந்த வாரத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

மேலும் படிக்க | வார ராசி பலன்கள்! மேஷம் தொடங்கி 6 ராசிகளுக்கான பலன்

விருச்சிகம் - இந்த வாரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். அவற்றை செயல்படுத்துவதற்கான உத்தியும் உங்களை வந்து சேரும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் நல்வாய்ப்பும் கிடைக்கும். ஆரோக்கியத்திற்கும் கொஞ்சம் கவனம் கொடுக்கவும்

தனுசு - இந்த வாரத்தின் பிற்பகுதியில், மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பயணத்தினால் ஆதாயங்கள் கிடைக்காமல் போகலாம். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். இறையருள் கிடைக்க வேண்டுவீர்கள், மாணவர்களுக்கும் இது சாதகமான வாரமாக இருக்கும்.  

மகரம் - இந்த வாரம் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டிற்கு படிக்க செல்ல விரும்பும் மாணவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். ஆனால் பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

கும்பம் - புத்திசாலித்தனமான செயல்களை செய்து சிறப்பான பலன்களை பெறும் வாரம் இது. முதலீடு உங்களுக்கு ஆதாயம் தரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை கேட்டு நடந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.  

மீனம் - இந்த வாரம் உங்களுக்கு திருமண வாழ்க்கைக்கு சாதகமானதாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம், வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவது நல்லது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News