Weekly Horoscope: தின ராசி பலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 5 முதல் தொடங்கும் வாரத்தில், துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் வார பலன்களை அறிந்து கொள்ளலாம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் அலுவலகத்தில் அனைவரிடமும் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும். இதனால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. முதலீடுகளில் கிடைக்கும் வருமானம் பெருகும். வாடிக்கையாளர்களுடன் பழகும் போது, டென்ஷன் ஆகாமல் இருக்கவும். இதனால் பிரச்சனைகள் வரலாம். வாடிக்கையாளர்களிடம் கண்ணியமாகப் பேசலாம். இளைஞர்களும் பிறர் சொல்வதைக் கேட்கக் கற்றுக் கொள்ள வேண்டும், மற்றவர் சொல்வதைக் கவனமாக கேட்டு, குறுக்கே பேசாமல் கண்ணியத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்பினால், உங்கள் அன்புக்குரியவர்களுடன் கலந்துரையாடுங்கள். நீரிழிவு நோயாளிகள் உணவு மற்றும் பானங்களில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். காலை அல்லது மாலையில் சிறிது தூரம் நடக்க வேண்டும். வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்குவதுடன், உங்களை அலங்கரிக்கும் பொருட்களையும் வாங்கலாம்.
விருச்சிகம்- இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எனினும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்து, வருமானம் பெரும். பூச்சிக்கொல்லி மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கையிருப்பை அதிகப்படுத்தினால், நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் எல்லா விஷயத்திற்கும் கவலைப்படாமல் இருக்க வேண்டும், தேவையில்லாமல் டென்ஷன் ஆவது நிகழ்காலத்திற்கு நல்லதல்ல. வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு நிச்சயமாக அதிகரிக்கும். ஆனால் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அனைத்தும் வீணாகிவிடும். உடலின் பின்பகுதியில் அதாவது முதுகுத் தண்டு, இடுப்பு அல்லது முதுகில் வலி அல்லது காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் தோள்களில் என்ன பொறுப்புகள் வந்தாலும், அவற்றை மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற வேண்டும்.
மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!
தனுசு - தனுசு ராசிக்காரர்கள் தங்கள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் தகராறு செய்யக்கூடாது, நீங்கள் விடுப்பில் இருந்தாலும், அதிகாரபூர்வ வேலையை புறக்கணிக்காதீர்கள். வணிகத்தில் முதலீட்டிற்கான சிறந்த நேரம் இது. எதிர்பாராத வகையில் பண வரவு கிடைக்கும். வணிக வர்க்கம் அரசாங்க ஆவணங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் பண பரிவர்த்தனைகளில் ஆவணங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும். அரசு வேலைக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும், கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும். தங்கையின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நீங்கள் மனம் விட்டு அவளிடம் பேச வேண்டும். சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், கவனக்குறைவாக இருப்பதை தவிர்த்து, மருத்துவர் பரிந்துரைத்தபடி நடக்க வேண்டும். முதலீட்டின் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்- இந்த ராசிக்காரர்கள் வாரத்தின் நடுப்பகுதி வரை சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் திட்டமிடல் பொருத்தமானதாக இருக்கும், குறிப்பாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுபவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பர பொருட்களின் வியாபாரிகள் லாபத்திற்கான முழு திறனைக் வெளிப்படுத்துவார்கள். ஆடம்பர பொருட்களை விற்பவர்கள் அதிக வருமானம் சம்பாதிக்க தயாராக இருக்க வேண்டும். வேலை மற்றும் படிப்பு தொடர்பாக இளைஞர்களும் பிற நகரங்களுக்குச் செல்லலாம். அவர்கள் தொழில் செய்ய மகிழ்ச்சியாக செல்ல வேண்டும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். அவர்களுடன் எந்த வித தகராறும் இருக்கக்கூடாது. வாரத்தின் தொடக்கத்தில் இதில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சில நேரம், வழக்கமான மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும்.
கும்பம் - கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் தடை ஏற்படும், ஆனால் பணியில் மூத்தவர்கள் வேலையில் தொய்வு ஏற்படுவதை அனுமதிக்க மாட்டார்கள். ஹோட்டல் உணவகத்தின் வர்த்தகர்களுக்கு லாபம் கிடைக்கும், பெரிய பார்ட்டிக்கான ஆர்டரைப் பெறலாம். உங்கள் நம்பகத்தன்மையைப் பேணலாம். படிப்பதற்கோ, வேலைக்காகவோ வீட்டை விட்டு வெளியூர் சென்ற இளைஞர்கள், மற்றவர்களின் பேச்சில் சிக்குவதைத் தவிர்க்கவும். வீட்டின் பாதுகாப்பை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், திருட்டு காரணமாக பொருட்கள் இழக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சரியாக மூடவும். மலச்சிக்கல் ஏற்படலாம். உணவில் தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை அதிகம் சேர்க்கவும்.
மீனம்- இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வேலையில் பங்குதாரர் தேவை. நம்பகமான துணையுடன் வேலையை முடிக்கவும். அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை விற்பவர்கள் எளிதாக லாபம் ஈட்ட முடியும், மற்ற வணிகர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் சாப்ட்வேர் ஃபேஷன் டிசைனிங் தொடர்பான படிப்புகளை படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய உறவுகளுக்கு அவசரப்பட வேண்டாம், வாரத்தின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன் விஷயங்கள் பிரச்சனை ஏற்படுத்தக் கூடும், படிப்படியாக உறவுகள் பலப்படும். வழக்கமான யோகா மற்றும் உடற்பயிற்சியை விடமால் தொடரவும். தற்போது உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேச்சில் சிறப்பு கவனம் தேவை.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ