Weekly Horoscope August 12 to August 18: இந்த வாரம் பல விசேஷங்கள் நடைபெற உள்ளது. குறிப்பாக வரலக்ஷ்மி நோம்பு, ஏகாதசி, சனி பிரதோஷ விரதம் மற்றும் மாச சிவராத்திரி போன்றவை நிகழ உள்ளது. அதனுடன் இந்த வாரம் சிம்ம ராசியில் சூரியன் உச்ச பெறுகிறார். சந்திரன் மகர ராசியில் பெயர்ச்சி அடைகிறார். எனவே ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் கடினமாக உழைக்க நேரிடும். வேலை வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிடலாம். மாணவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதறக்கூடும். பிடித்த பாடங்களில் கவனம் செலுத்துங்கள். வெளியூரில் வேலை நிமித்தமாக இருப்பவர்களும் லீவு கிடைக்கும். அமிலத்தன்மை மற்றும் அல்சர் பிரச்சனை ஏற்படலாம், எனவே காரமான உணவுகளை தவிர்க்கவும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். சில ஒப்பந்தங்களில் லாபம் கிடைக்கும். இந்த வாரம் குழந்தைகளின் கல்வி மற்றும் உங்களின் தொழிலில் முக்கியத்துவம் கொடுக்கவும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவரின் உடல்நிலை மோசமடையலாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க | 18 ஆண்டுக்கு பிறகு சூரியன் கேது சேர்க்கை.. பதவி, புகழ், பொற்காலம் இந்த ராசிகளுக்கு
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வருமானம் உயரலாம். பிரச்சனைகளை சமாளிக்க பெற்றோர் மற்றும் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் அலட்சியத்தை தவிரக்க வேண்டும். அதேபோல் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க மிகுந்த சிந்தனையுடன் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். பெண்களுக்கு இந்த வாரம் முதுகுவலி, கால் வலி, அடிவயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையால் கவலை ஏற்படும். தந்தைக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படலாம்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவாலாக இருக்கும். முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் திருமண வாழ்க்கையில் சில பதட்டங்கள் ஏற்படலாம். நிதி உதவிகளை வழங்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்த வரை, கால் வலி மற்றும் தொடையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் கணவன் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். இந்த வாரம் பெரிய செலவுகள் ஏற்படலாம். குழந்தைகளின் கல்விக்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீரிழப்பு தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். பதவி உயர்வு பெறலாம். மற்றவர்களை குறை கூறாமல் இருக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வானிலை மாற்றத்தால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். வீட்டின் தேவைகளில் கவனம் செலுத்தி நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் ஈகோவை கைவிட வேண்டும். நிதி ரீதியாக யாரையும் நம்ப வேண்டாம். இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கலாம். மன உளைச்சலில் இருந்த பெண்கள், இப்போது கொஞ்சம் நிம்மதி அடைவார்கள். இந்த வாரம் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு அலுவலகப் பணிகள் அதிகமாக இருக்கும். தொழிலதிபர்கள் தொழிலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். படிப்பில் சற்றும் அலட்சியமாக இருப்பார்கள். ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஜாகிங் செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். கோபத்தை தவிர்க்கவும். இந்த வாரம் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
மீனம்: மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் பாராயணம், பூஜை, மங்கள நிகழ்வுகள் நடக்கும். இந்த வாரம் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். வாகனத்தை எச்சரிக்கையுடன் ஓட்டவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இன்னும் 10 நாட்களில் குரு பெயர்ச்சி.. பணம், மகா அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ