இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும்

July 04 Horoscope : ஜோதிட கணக்கீடுகளின்படி, கிரகங்களின் சுப பலன்களால் சில ராசிக்காரர்களுக்குஇன்று மிகவும் சாதகமாக நாளாக இருக்கும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 4, 2022, 06:05 AM IST
  • இவர்களுக்கு இன்றைய தினம் ஒரு வரப்பிரசாதம்
  • பணியிடத்தில் நிலைமை வலுவாக இருக்கும்
  • கௌரவம், செல்வச் செழிப்பு, வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும் title=

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் தனித்தனியாக விவரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த 12 ராசியின் ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. பொதுவாக ஒருவரின் ஜாதகம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இன்று அதாவது ஜூலை 4 ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக நாளாக இருக்கும். இவர்களுக்கு இன்றைய தினம் (ஜூலை 4ம் தேதி) ஒரு வரப்பிரசாத தினமாக அமையும். எனவே இன்று அதாவது ஜூலை 4 ஆம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பொன்னான நாளாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வாகனம் வரக்கூடும். வசதிகள் பெருகும். பணியிடத்தில் நிலைமை வலுவாக இருக்கும் மற்றும் பதவி உயர்வுக்கான முழு வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் காதல் உறவில் நீங்கள் முற்றிலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகை தருவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் சிறப்பான வெற்றியி பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்களின் குழந்தைகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 11 நாட்களுக்கு பின் இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம்

கடகம்: கடக ராசிக்காரர்களின் கௌரவம், செல்வச் செழிப்பு, வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். காதல் அல்லது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசு மற்றும் அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமையும். சில முக்கியமான பொறுப்புகளை பெறலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும், உங்கள் முடிவுகளை மக்கள் பாராட்டுவார்கள். மகனின் தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும் என்ற செய்தி வரும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருக்கிய இருக்கும்.

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களின் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் உடனான உறவு திடீரென்று மேம்படும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். ஒரு புதிய உறவு தொடங்கும். ஆன்மீகத்தில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். இந்த ஆண்டு ஒரு புதிய திசையையும் சாத்தியங்களையும் கொண்டு வரும். பல ஆதாயங்கள் திடீரென்று ஏற்படும் மற்றும் நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்
சூரியன் - மிதுன ராசி
செவ்வாய் - மேஷ ராசி
புதன் - ரிஷப ராசி- மிதுன ராசி
குரு - மீன ராசி
சுக்கிரன். - மிதுன ராசி
சனி - கும்ப ராசி-மகர ராசி
ராகு. - மேஷ ராசி
கேது - துலாம் ராசி

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மிதுனத்தில் நுழையும் புதன்: நாளை முதல் இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம், மகிழ்ச்சி கூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News