சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள்

Venus Transit: சுக்கிரன் கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது மாளவ்ய யோகம் உருவாகும். சுக்கிரன் நீச்சமாக இருந்தால், மாளவ்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு தோஷமாக மாறிவிடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2022, 09:19 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்
  • சுக்கிரனின் சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்
  • கும்ப ராசிக்காரர்களுக்கு முதலீடு செய்ய இது நல்ல நேரம்
சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள் title=

சுக்கிரன் ராசி மாற்றம் 2022: மகிழ்ச்சி, பொலிவு, செல்வம் மற்றும் ஆடம்பரம் என வாழ்க்கையை வளமாக வாழ வைக்கக் காரணகர்த்தாவான சுக்கிரன் கிரகம் அக்டோபர் 18ம் தேதிஇரவு 9.38 மணிக்கு துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். நவம்பர் 11ம் தேதி வரை சுக்கிரன் துலாம் ராசியில் சஞரிப்பார். அதன் பிறகு விருச்சிக ராசியில் நுழையும், சுக்கிரன் கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது மாளவ்ய யோகம் உருவாகும். சுக்கிரன் நீச்சமாக இருந்தால், மாளவ்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு தோஷமாக மாறிவிடும். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் எப்படி பலன்களை அளிக்கும்? தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுக்கிரன் காதலுக்கும், ஆசைக்கும் அதிபதி ஆவார். கன்னி ராசியில் நீச்சம் பெற்றிர்நுத சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாமில் ஆட்சி பெற்று அமரும் நிலையில், சூரியனும் துலாம் ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சி பெற்ற சுக்கிரனால் சிலருளுக்கு மாளவியா யோகமும், சிலருக்கு விபரீத ராஜயோகமும் ஏற்படும்.

சுக்கிரன் கொடுத்தால், சூரியன் சும்மா இருப்பாரா? சூரியனின் சஞ்சாரத்தில் சிலருக்கு நீச்ச பங்க ராஜயோகமும் கிடைக்கும். சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது கொடுக்கும் பலன்கள் எதிர்பாராததாக இருக்கும். சில ஜாதகங்களில் நீசம் பெற்றிருந்தாலும் நீசபங்க ராஜயோக நிலையை பெறும் போது நல்ல பலன்களை தருவார்.

மேலும் படிக்க | நிலை மாறும் சனியால் ஏழரை சனியிலிருந்து நிவாரணம்: இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும் 

அக்டோபர் பிற்பகுதியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சுக்கிரன், தனது சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருந்தாலும், தனக்கு நட்பு கிரகமான சனி ஆட்சி செய்யும் மகரம், கும்ப ராசிகளில் நட்பு நிலையிலும், புதனின் ராசியான மிதுனத்தில் நட்பாகவும், கன்னி ராசியில் நீசமும் அடைகிறார்.

தனக்கு சம பலமுள்ள செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிக ராசியில் சம நிலையில் இருக்கிறார். சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியிலும் சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியிலும் பகை நிலையை அடைகிறார். தனக்கு நிகரான பலம் வாய்ந்த, ஆனால் பகை கொண்ட கிரகமான குரு, ஆட்சி செய்யும் தனுசு ராசியில் நட்பாகவும் மீனத்தில் உச்சமாகவும் இருக்கிறார்.

எதிரியின் வீட்டில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான் என்பது சுக்கிரனின் சிறப்பு ஆகும். சுக்கிரன், தான் நின்ற ராசியில் இருந்து 7 ம் பார்வையாக பிற ராசியைப் பார்ப்பார். சுக்கிரனின் மாளவியா யோகம் பெற்றவர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மீன ராசியில் குரு; ராஜயோகத்தை அனுபவிக்கும் ‘4’ ராசிகள் இவை தான்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News