சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, ராஜாதி ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு

Venus Nakshatra Transit : கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி, அதாவது அமாவாசை அன்று, சுக்கிரன் கிரகம் உத்திரம் நட்சத்திரத்திலிருந்து விலகி ஹஸ்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 4, 2024, 05:51 PM IST
  • காதல் மலரும். திருமணம் நடைபெறும்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.
  • புதிய மற்றும் சிறந்த திட்டங்களைப் பெறுவீர்கள்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, ராஜாதி ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு title=

Venus Nakshatra Transit 2024 : ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்வார். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். அதேபோல் சுக்கிரன் கிரகமானது சுக போகங்களின் அதிபதி ஆவார். 

ஜோதிடத்தின் படி சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர் என்று கூறுவார்கள். எனவே, இந்த சுக்கிரன் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும் போதெல்லாம், அதன் பலன் அனைத்து ராசிகளுக்கும் தரும். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி உத்திரம் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறிய சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்தார், தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதி வரை சுக்கிரன் இந்த நட்சத்திரத்தில் தான் பயணிப்பார். அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இவர்களுக்கு செல்வ பெருகும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

சுக்கிர யோகத்தை பெற, "ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத்" என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

ரிஷபம்: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதி ஆவார். மேலும், சுக்கிரன் கிரகம் தற்போது உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் அமைந்துள்ளார், இதனால் இந்த நேரத்தில் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். இலக்கியம், எழுத்து போன்ற துறைகளில் படிக்கா விரும்பும் மாணவர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பொருள் இன்பம் அதிகரிக்கும். காதல் மலரும். திருமணம் நடைபெறும். 

மேலும் படிக்க | Guru Vakra Peyarchi In Taurus: குரு வக்ர பெயர்ச்சி.. மகா பொற்காலம், அதிர்ஷ்ட பண மழை இந்த ராசிகளுக்கு

மிதுனம்: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் இருப்பீர்கள். பொருள் இன்பம் அதிகரிக்கும். வாகனம் மற்றும் சொத்துக்களையும் வாங்கலாம். மூதாதையர் மூலம் சொத்துக்களைப் பெறலாம். தொழிலில் புதிய மற்றும் சிறந்த திட்டங்களைப் பெறுவீர்கள். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம்.பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் சுக்கிரன் பணம் மற்றும் பேச்சு ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் பேச்சில் நேர்மறையான தாக்கம் ஏற்படும். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், நிலுவையில் இருந்த பணத்தை திரும்பிப் பெறுவீர்கள். பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி.. அபூர்வ ராஜயோகத்தால் 2025 வரை அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News