கோவர்தன் பூஜை 2022: கோவர்தனன் பூஜை என்றழைக்கப்படும் அன்னகூட திருவிழா தீபாவளி திருநாளுக்கு அடுத்த நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பூஜை, வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோவர்தன பூஜை திருநாள் அன்று, குஜராத்தி மக்களின் புத்தாண்டு தொடங்குகிறது என்றால், மராத்தியர்களுக்கு வாமண ஜெயந்தி நாள் ஆகும். வாமணர், மகாபலி சக்கரவர்த்தியை பாதாள லோகத்தில் அமிழ்த்திய நாள், தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது கோவர்தன பூஜை கொண்டாடப்படும் நாள் என்பது மராத்தியர்களின் நம்பிக்கை.
ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை அனுசரிக்கப்படவில்லை. 27 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐப்பசி மாத அமாவாசை நாளான இன்று சூரிய கிரகணம் ஏற்படுவதால், பூஜை உட்பட பல பண்டிகைகளின் கொண்டாட்டங்களும் மாறியுள்ளன. அதில் தீபாவளிக்கு மறுநாள் அனுசரிக்கப்படும் கோவர்த்தன பூஜை, அக்டோபர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | சூரிய கிரகணம் 2022: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும்
இந்த முறை தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 அன்று கொண்டாடப்பட்டது. ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தையொட்டி, அக்டோபர் 26ம் தேதி கோவர்த்தன பூஜை நடக்கிறது. அதாவது, தீபாவளிக்கு அடுத்த மூன்றாம் நாள் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படும்.
முன்னதாக 1995-ம் ஆண்டு தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அந்த ஆண்டும் கோவர்தன பூஜை தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. சூரிய கிரகணத்தால் தீபாவளி வழிபாட்டில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும், சில பூஜைகளும் பண்டிகைகளும் அனுசரிக்கும் நாட்கள் மாறியிருக்கின்றன.
நவம்பர் 8 ஆம் தேதி, தேவ் தீபாவளி நாளில் சந்திர கிரகணம் ஏற்படவிருக்கின்றன. புதன், வியாழன், சுக்கிரன் மற்றும் சனி என பல கிரகங்களினால், சந்திர கிரகணத்தின்போது, பல ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இன்று, ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை நாட்டின் பல பகுதிகளில் காணலாம்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு நாயை வணங்கும் நாடு! மகாபாரதத்தை போற்றும் நேபாள நாட்டின் நாய் தீபாவளி
ஐப்பசி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பிரதிபத திதியில் கோவர்த்தன பூஜை செய்யப்படுகிறது. இம்முறை, கோவர்த்தன பூஜைக்கு உகந்த நேரம் அக்டோபர் 26ம் தேதி காலை 6.29 மணி முதல் 8.43 மணி வரை என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நாளில் ஒரு பசு அல்லது கன்று மலையைச் சுற்றி அழைத்துச் செல்லப்படும். இருப்பினும், பல இடங்களில் இந்த பாரம்பரியம் முடிவுக்கு வந்தது. இன்று கிருஷ்ணனுக்கு உகந்த நாள். கோவர்த்தனமலையை வணங்கி, கிருஷ்ணருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றது.
மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ