சூரிய பெயர்ச்சி: திரிகிரஹி யோகத்தினால் சிக்கலில் சிக்கும் ‘4’ ராசிகள்!

கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய கடவுள் நவம்பர் 16-ம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியை அடைந்த பிறகு, ஏற்கனவே இருக்கும் புதன் மற்றும் சுக்கிரன் ராசிகளுடன் இணைவதால், ஒரு திரிகிரஹி யோகம் உருவாகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2022, 08:56 PM IST
  • பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • தொழில் பங்குதாரருடன் தகராறு ஏற்படலாம்.
  • பல புதிய நோய்கள் சூழலாம்.
சூரிய பெயர்ச்சி:  திரிகிரஹி யோகத்தினால் சிக்கலில் சிக்கும் ‘4’ ராசிகள்! title=

சூரியப் பெயர்ச்சி நவம்பர் 2022: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியக் கடவுள், நவம்பர் 16 அன்று விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியை அடைந்த பிறகு, ஏற்கனவே இருக்கும் புதன் மற்றும் சுக்கிரன் ராசிகளுடன், இணைவதால், ஒரு திரிகிரஹி யோகம் உருவாகிறது. சூரியபகவானின் இந்த சஞ்சாரத்தால், 4 ராசிக்காரர்கள் சிக்கலில் சிக்கலாம் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ராசி மாற்றத்தால் குடும்பம், தொழில், பணத்தில் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். அந்த 4 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி: சூரிய பகவானின்  சஞ்சாரத்தினால் உருவாகும் திரிகிரஹி யோகத்தின் தாக்கத்தால், கன்னி ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த யோகத்தால் உங்கள் தன்னம்பிக்கை குலைந்து குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் காதல் மற்றும் திருமண உறவு மோசமடையலாம். தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் ஏமாற்றம் அடையலாம். இதற்குப் பரிகாரமாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம்.

மேலும் படிக்க | விருச்சிகத்தில் சூரிய பெயர்ச்சி; அனைத்திலும் வெற்றியை அடையப் போகும் ‘சில’ ராசிகள்!

தொழில் பங்குதாரருடன் தகராறு ஏற்படலாம்

விருச்சிகம்: இந்த ராசியில் சூரிய பகவான் நுழைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். உங்கள் வணிக கூட்டாளருடன் உங்களுக்கு தகராறு இருக்கலாம். அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தொழிலில் நஷ்டம் வரலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கலாம், அதன் காரணமாக குடும்பத்தில் பதற்றம் இருக்கும். பண விஷயத்தில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். இதைத் தவிர்க்க தினமும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கவும்.

பல புதிய நோய்கள் சூழலாம்

தனுசு: இந்த ராசிக்காரர்கள் பல நோய்களை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு டெங்கு, காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய்கள் வரலாம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில், உங்கள் சக ஊழியர்களுடன் தகராறு ஏற்படலாம். வேலை தேடும் மக்களின் காத்திருப்பு மேலும் அதிகரிக்கும். குடும்பத்தில் பதற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உங்கள் நம்பிக்கை குறையும், இதன் காரணமாக நீங்கள் எப்போதும் ஏமாற்றத்தை உணருவீர்கள். நிவாரணம் பெற, தினமும் காலையில் சூரியனுக்கு அர்கியம் வழங்க வேண்டும்.

நிதி நிலை பலவீனமாக இருக்கலாம்

மேஷம்: சூரிய பகவானின் சஞ்சாரத்தால், மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை பலவீனமாக இருக்கும். அவர்களின் வருமானத்தில் பாதிப்பு இருக்காது. ஆனால் செலவுகள் முன்பை விட அதிகரிக்கும். நீதிமன்றம் தொடர்பான சில விஷயங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு புதிய நோய் குடும்ப உறுப்பினரைச் சூழ்ந்து கொள்ளும். இதன் காரணமாக நீங்கள் சிக்கலில் சிக்கலாம். இதைத் தவிர்க்க தினமும் சூரியனை வழிபடத் தொடங்குங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குரு; ‘இந்த’ ராசிகளின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News