Ketu Sun Conjunction In Kanni: கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஒரு மாத காலம் வரை நீடிக்கும். இப்படிப்பட்ட நிலையில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை ரிஷபம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆற்றல், பண வரவு, மகா அதிர்ஷ்டத்தை தரும். எனவே அந்த பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
இந்நிலையில் 16 செப்டம்பர் 2024 முதல், கிரகங்களின் அரசனான சூரியன், கன்னி ராசியில் பெயர்ச்சி அடைவார், அதன் பின்னர் ஒரு மாத காலம் கன்னி ராசியில் தான் பயணிப்பார். ஜோதிடத்தின் படி, கிரக யோகமானது சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஆகும் இடத்தில் அமையும். எனவே உந்த கிரக யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசியின் ஐந்தாம் வீட்டில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை கல்வித்துறையில் நல்ல பலன்களைத் தரும். அதனுடன் ரிஷப ராசிக்காரர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறலாம். மேலும், வெளிநாட்டில் படிக்க செல்லலாம். ஆன்மீக வாழ்வில் வெற்றி பெறுபவர்கள்.
சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசியின் இரண்டாம் வீட்டில் சூரியன் கேது சேர்க்கை அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில், சிம்ம ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மூதாதையர் சொத்துகளை பெறலாம். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign): விருச்சிக ராசியின் 11 ஆம் வீட்டில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை நடக்கப் போவதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். பணப் பலன்களைப் பெறுவீர்கள். மனம் திருப்தியுடன் இருக்கும். மூத்த சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவைப் பெறுவீர்கள். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்.
தனுசு (Sagittarius Zodiac Sign): சூரியன் மற்றும் கேது சேர்க்கை 10 ஆம் வீட்டில் நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு கிடைக்கும். அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பிரபலம் அடைவீர்கள். தொழில் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசியின் 9ம் வீட்டில் சூரியன் மற்றும் கேது சேர்க்கை நடக்க இருப்பதால், மகர ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆவர்வம் அதிகரிக்கும். மத ஸ்தலங்களுக்கு செல்லலாம். முழு ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரைக்கு செல்லலாம். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். இதனால் தொழில் வளர்ச்சி அடையும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ