சூரியன் குரு சேர்க்கை 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். மேலும் குரு வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். இந்த நேரத்தில் குரு தனது ராசியான மீனத்தில் இருக்கிறார். மறுபுறம், மார்ச் 15 அன்று காலை, சூரியன் மீன ராசிக்குள் நுழைவார். இந்த வழியில், குருவின் ராசியான மீனத்தில் சூரியனும் குருவும் இணைந்திருக்கும். சூரியன் - குரு சேர்க்கை அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், சில ராசிக்காரர்களுக்கு, சூரியனின் பெயர்ச்சியால் உருவாகும் இந்த கூட்டணி மிகவும் சுப பலன்களைத் தரும்.
சூரியன் பெயர்ச்சி 2023 தேதி மற்றும் நேரம்
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கிரகங்களின் அரசனான சூரியன், மார்ச் 15ஆம் தேதி காலை 6.58 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். பிறகு ஏப்ரல் 14, 2023 தேதி மீனத்தில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகுவார்.
மேலும் படிக்க | சைத்ர நவராத்திரி 2023: அன்னை துர்கையின் அருளை முழுமையாக பெறும் ‘சில’ ராசிகள்!
இந்த ராசிக்காரர்கள் சூரியனின் பெயர்ச்சியால் வலுவான பலன்களைப் பெறுவார்கள்
ரிஷபம்: பொருளாதார ரீதியில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பெரிய முன்னேற்றம் அடையலாம். பதவி உயர்வு, புதிய வேலையில் சேரலாம். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பண ஆதாயம், வருமானம் அதிகரிக்கும். தேர்வு-போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்: திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். பழைய பிரச்சனைகள் நீங்கும்.
மீனம்: பணியிடத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் உண்டு. வருமானத்தில் உயர்வு இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | வேலை-வியாபாரத்தில் மகத்தான வெற்றியைத் தரும் சீன ’பெங்சுய்’ டிப்ஸ்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ