இந்து மதத்தில் திங்கட்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வடமொழியில் சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை நாள், சந்திரனுக்கு உரியது. சந்திரனை தலையில் பிறையாக சூடிய சிவபெருமானுக்கு உகந்த நாளான சோமவாரத்தன்று விரதம் இருப்பது மிகவும் நல்லது.
அதிலும் திங்கட்கிழமைகளில் பிரதோஷம் வந்தால், அது சோமவார பிரதோஷம் என்றும், அன்று விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது என்பதும் இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஏனென்றால், சோமன் என்றால் சிவன், சோமவாரம் என்பது திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை என்பதால், சிவாலயங்களில் சோமவாரப் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. இன்று சோமவாரப் பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும்.
மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்கும் பிரதோஷம் என்பதால், சிவனுக்கு உகந்த திங்களன்று வரும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை தக்கவைத்து நீலகண்டனாய் திகழும் சிவனைப் போற்றும் சோமவார பிரதோஷமும், அன்று இருக்கும் விரதமும் மிகவும் சக்தி வாய்ந்தது. சிவனுக்கு இருக்கும் விரதங்களில் முக்கியமானது சோமவார விரதம் மற்றும் பிரதோஷ விரதம். இந்த இரண்டும் ஒரே நாளில் வந்தால் எவ்வளவு சிறப்பு என்பதை சொல்லவேத் தேவையில்லை.
சோமவார பிரதோஷ விரதம் இருப்பது எப்படி?
இந்த விரதம் ஏற்பவர்கள், அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
சந்திரன் மனோகாரகன் என்று அழைக்கப்படுபவர். நமது மனதில் ஏற்படும் குழப்பத்துக்கும் காரணமாகும் சந்திரனின் பிடியில் இருந்து நம்மை விடுவிக்க சிவன் ஒருவரால் தான் முடியும். சோமவார பிரதோஷத்தன்று சிவனை வழிபட்டால், மனக்குழப்பங்கள் தெளிந்து, மனத்தெளிவை சிவன் வழங்குவார்.
அபிஷேகப் பிரியர்
விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால், சிவன் அபிஷேகப் பிரியர். இன்று, சந்தனம், பால், இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளும் பாவங்களும் விலகி நல்ல கதி கிடைக்கும்.
தோஷங்களைத் தீர்க்கும் சோமவார பிரதோஷம்
ஒருவரின் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் உள்ளிட்ட அனைத்து நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாக்கும் சோமவார பிரதோஷத்தை கடைபிடித்தால், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும், திருமணத் தடை நீங்கும்.
அபிஷேக பலன்கள்
சோமவாரப் பிரதோஷத்தன்று பாலபிஷேகம் செய்தால் நோய்கள் தீர்ந்து ஆயுள் விருத்தியாகும். தயிர் அபிஷேகம் செய்தால் வாழ்க்கை வளம் பெறும். நெய் அபிஷேகம் செய்தால் முக்தி கிட்டும். இளநீர் அபிஷேகம் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும். எண்ணெய் அபிஷேகம் சுகவாழ்வைக் கொடுக்கும்.
சந்தன அபிஷேகம் செய்வதன் உடலின் சக்தியைக் கூட்டும், மலரபிஷேகம் தெய்வ கடாட்சத்தைக் கொடுக்கும். தேன் அபிஷேகம் செய்தால் நமது பேச்சில் இனிமை கூடும். பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும். சிவனுக்கு செய்யும் அபிஷேகத்தை நந்திக்கும் செய்யவேண்டும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
விரதம் இருப்பதுடன் சோமவாரப் பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடனும் வறுமையும் நீங்கி செல்வம் வந்து சேரும். சோமவார பிரதோஷ நாளில் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒரு நைவேத்தியத்தை சிவனுக்குப் படைத்தால், வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல்கள், பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | திருமண தடை நீக்கி மாங்கல்ய வரம் தரும் வழிபாடுகள்! வழிபட்டால் கைமேல் மாங்கல்ய பலன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ