சனீஸ்வரரின் கடைக்கண் சிரிப்பால் முகம் மலரும் மூன்று முத்தான ராசிகள்

Shani Dev Rashi Parivartan: மகர ராசிக்கு பிரவேசித்த சனிதேவரின் பயணத்தினால் அடுத்த 6 மாதங்களுக்கு 3 ராசிக்காரர்களுக்கு லாபம் பொழியும். சனி தேவன் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 23, 2022, 06:21 AM IST
  • நீதிதேவன் சனீஸ்வரரின் அன்புக்கு ஆளாகும் 3 ராசிகள்
  • ஆறு மாதத்திற்கு அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
  • வாயை கட்டுப்படுத்தவும் கும்ப ராசிக்காரரே
சனீஸ்வரரின் கடைக்கண் சிரிப்பால் முகம் மலரும் மூன்று முத்தான ராசிகள் title=

Shani Dev Rashi Parivartan: மகர ராசிக்கு பிரவேசித்த சனிதேவரின் பயணத்தினால் அடுத்த 6 மாதங்களுக்கு 3 ராசிக்காரர்களுக்கு லாபம் பொழியும். சனி தேவன் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். மகர ராசிக்குள் நுழைந்துள்ள நீதிதேவன், அடுத்த 6 மாதங்களுக்கு 3 ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை அள்ளித்தருகிறார். செய்யும் வேலைக்கு ஏற்ப பலன்களைத் தரும் சனி தேவன் நீதிபதியாவார். தர்ம வழி நடப்பவர்களுக்கு லாபத்தையும் மனநிம்மதியையும் தரும் சனீஸ்வரர் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கிவிடுவார் என்றும், அவர் யாரிடமாவது கோபப்பட்டால், அவரது வாழ்க்கையில் பேரழிவுகளின் காலம் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. சனி தேவன் அடிக்கடி ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். இவர்களின் இந்த சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கிறது.

அடுத்த 6 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு அருள் பொழியும்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி தேவன் ஜூலை 12 அன்று மகர ராசிக்குள் நுழைந்தார். அவர்கள் இப்போது அடுத்த 6 மாதங்களுக்கு மகரத்தில் இருந்து கடமையாற்றுவார். ஏப்ரல் முதல் ஜூலை வரை கும்பத்தில் இருந்த சனீஸ்வரர், அடுத்த 6 மாதங்களுக்கு மூன்று ராசியினருக்கு தனது அருட்பார்வையால் ஆனந்தப்படுத்தவிருக்கிறார்.  சனிபகவானின் அருள் மழையால் நனையவிருக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை?

மேலும் படிக்க | சூரிய பகவான் அருளால் ஆடி மாதம் செல்வ மழையில் நனையும் ‘5’ ராசிகள்

வியாபாரத்தில் லாபம்

மீனம்: சனிபகவானின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கி லாபகரமான தொழிலில் முதலீடு செய்யலாம். அதேபோல வருமானத்திற்கான புதிய ஆதாரங்களும் உருவாக்கப்படும். இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெறுவார்.
 
பதவியில் லாபம்

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்த 6 மாதங்கள் நன்றாகவே இருக்கும். அவர்கள் வேலை மற்றும் தொழில்களில் பதவி உயர்வு பெறலாம். நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அவர்கள் புதிய பகுதிகளில் முதலீடு செய்யலாம்.

குழந்தைகளின் கல்வியும் நிம்மதியைத் தரும். குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் படிக்க | சனியின் அருளால் மஹாபுருஷ ராஜயோகம்

பயணங்களினால் லாபம்

ரிஷபம்: மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிப்பது இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிக்காரர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கலாம். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். அவர்கள் குடும்பத்துடன் வெளியில் நடந்து செல்லலாம். திடீரென்று பெரும் பணம் வரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அங்கார யோகத்தால் கஷ்டப்பட்டு நஷ்டப்படப்போகும் 5 ராசிகள்: ராகு செவ்வாய் தோஷம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News