உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம், பண மழை கொட்டும்

Shani Dev Uday Saturn Rise Will Kumbh : சனிபகவான் கும்ப ராசியில் தற்போது உதயமாகப் போகிறார். இந்த சனி உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 29, 2024, 03:54 PM IST
  • சனிபகவானின் உதயத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் கிடைக்கும்.
  • கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • குழந்தை மூலம் நல்ல செய்திகளைப் பெறலாம்.
உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம், பண மழை கொட்டும் title=

30 வருடங்களுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி உதயம் : ஜோதிட சாஸ்திரப்படி, சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாகும், ஏனெனில் அது ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து அதன் பிறகுதான் மற்றொரு ராசிக்கு மாறும். அதுமட்டுமின்றி சனி அவ்வப்போது தன் நிலையை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். அதேபோல் சனியின் நட்சத்திர பெயர்ச்சி அல்லது சனியின் உதயம் மற்றும் அஸ்தமனம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் அஸ்தமித்துள்ளது. வருகிற மார்ச் 18ஆம் தேதி சனி உதயம் நடக்ககியுள்ளது. சனியின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் சுப பலன் பெரும் ராசிக்காரர்களுக்கு தொழில், பண ரீதியாக லாபம் அதீத லாபம் கிடைக்கும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் சாதகமான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சிம்மம் (Leo Zodiac Sign): சனிபகவானின் உதயத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் கிடைக்கும். ஏனெனில் சனி உங்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இருந்து ஏழாம் வீட்டில் உதமாகப் போகிறார். இதனால் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும், தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆசைகள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக நிதானமாக நிறைவேறலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | கண்ணேறு கண் திருஷ்டி நீங்க சுலபமான பரிகாரங்கள்! சிம்பிளா பிரச்சனையை முடிக்க வழிகள்!

துலாம் (Libra Zodiac Sign): சனிபகவானின் உதயத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் சனி உங்களின் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் உதமாகப் போகிறார். எனவே, குழந்தை மூலம் நல்ல செய்திகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழிலில் முழுமையான வெற்றியையும், மரியாதையையும், லாபத்தையும் பெறுவீர்கள். காதல் உறவு நன்றாக இருக்கும். வீட்டிக் உறவினர்களின் வருகை இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கும்பம் (Aquarius Zodiac Sign): சனிபகவானின் உதயத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கலாம். ஏனெனில் சனி உங்களின் ராசியில் தான் உதமாகப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் அலுவலகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். வங்கி இருப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கும்ப ராசிக்காரர்கள் புதிய திட்டங்களை இப்போது உருவாக்கினால் அதில் வெற்றி காணலாம். சனியின் அருளால் வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய நட்புகள் உருவாகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Mahashivratri 2024: இந்த சிவராத்திரி சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்.. செல்வம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News