சனியின் நட்சத்திர மாற்றத்தால் விதியும் மாறும்! ஜாக்கிரதை முன்னெச்சரிக்கை

Lord Shani: மார்ச் 14, 2023 அன்று அவிட்ட நட்சத்திரத்தில் இருந்து சதய நட்சத்திரத்தில் நுழையப் போகும் சனியின் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 27, 2023, 07:33 AM IST
  • அவிட்ட நட்சத்திரத்தில் இருந்து பெயர்கிறார் சனீஸ்வரர்
  • சதய நட்சத்திரத்திற்கு பெயரும் சனி பகவான்
  • சனீஸ்வரரின் நட்சத்திர பெயர்ச்சி விளைவுகள்
சனியின் நட்சத்திர மாற்றத்தால் விதியும் மாறும்! ஜாக்கிரதை முன்னெச்சரிக்கை title=

நியூடெல்லி: ஜோதிட சாஸ்திரப்படி, மந்தன் என்று அழைக்கப்படும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஓர் முறை ராசியை மாற்றுகிறது. ராசி மாற்றம் நிகழ்வதுபோல, நட்சத்திர மாற்றமும் நடைபெறுகிறது. அந்தவகையில், சனி கிரகம், பிப்ரவரி 18, 2022 அன்று, நீதியின் கடவுளான சனி, மார்ச் 14, 2023 அன்று அவிட்ட நட்சத்திரத்தில் இருந்து சதய நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். சனியின் பெயர்ச்சி பலரின் வாழ்க்கையிலும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

அத்துடன், சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பெயர்ச்சியாகியுள்ள ஜனவரி 31 ஆம் தேதி முதல் அஸ்தமன நிலையில் இருக்கிறார். மார்ச் 6, 2023 திங்கட்கிழமை அன்று அவர் உதயமாவார். சனியின் அஸ்தமன நிலையும், உதயமும் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி

சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராகுவுக்கும் சனி தேவருக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது, அதனால்தான் ராகுவுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பால் சதய நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

சத்ய நட்சத்திரத்தில் சனி

சதய நட்சத்திரத்தில் சனியின் பிரவேசம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும் என்றால், சிலருக்கு கெடுபலன்கள் நடைபெறும். சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண இழப்பு, மனதில் நிம்மதியின்மை என பிரச்சனைகளில் உழல நேரிடலாம்.  

மேலும் படிக்க | மார்ச் மாத பலன் 2023: சனியால் பாதகம் ஏற்பட்டாலும் குரு கை கொடுப்பார்..நம்பிக்கையாக இருங்கள்

மிதுனம்: சதய நட்சத்திரத்தில் சனிபகவான் பிரவேசம் செய்வது மிதுன ராசிக்காரர்களுக்கு கவலைகளை அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே  மிஞ்சும். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவும். 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றம் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தரும். கடனில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு, இது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் என்பதால், அமைதியாக நிலைமையை கண்காணிக்க வேண்டும்.  

தனுசு: சனிபகவான் நட்சத்திரம் மாறி, சதயம் நட்சத்திரத்தில் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என்பதை உணர்த்தும். வாழ்க்கை துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும், வாய் வார்த்தைகளில் கட்டுப்பாடு அவசியம். பணத்தை சேமிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இன்று அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News