உலக பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்படுகிறது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு, பூரி ஜெகநாதர் கோயிலின் கஜனா மீண்டும் திறக்கப்பட உள்ளது. கோவிலின் கருவூலத்தைத் திறப்பதாக தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு முக்கியமான ஒன்று பூரி கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதி பிஸ்வநாத் ராத் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு இந்த கருவூலத்தை திறக்கும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவில் கோயில் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் தவிர, தொல்லியல் குழுவினர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நிபுணர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.
குழுவில் பாம்பு பிடிப்பவர் இடம்பெற்றுள்ளது ஏன்?
கருவூலத்தைத் திறக்கும்போது பாம்பு பிடிப்பவரும் உடன் இருப்பார். இது விசித்திரமானதாக தோன்றினாலும், இந்து நம்பிக்கைகளின்படி, கடவுளின் நகை உட்பட சொத்துக்களை யாரும் அணுகாத வண்ணம், நாகம் பாதுகாக்கும். இதனால், மிகவும் புராதனமான கோவிலான பூரி ஜெகந்நாதர் கோவிலின் உட்புற கஜானாவை திறக்கும்போது, குழுவின் முக்கியமான சிலருடன் முதலில் பாம்பு பிடிப்பவர்கள், மருத்துவக் குழுவினரும் செல்வார்கள்.
மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!
கருவூலம் திறப்பது தொடர்பான ஒவ்வொரு அம்சத்தையும் முழுமையாக ஆராய்ந்த பிறகு, இந்த கஜானா திறக்கப்படுகிறது. 46 ஆண்டுகளுக்கு பிறகு (இதற்கு முன்னதாக 1978 இல் கருவூலம் திறக்கப்பட்டது) அதாவது 46 ஆண்டுகளாக திறக்கப்படாத கருவூலத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதை கணிக்கமுடியாது என்பதால், எந்தவொரு நிலைமையையும் சமாளிக்கும் வகையில் இந்த குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கருவூலம் திறக்கும் பணியைத் தொடங்கும் முன், கோவில் பூசாரிகள் உலகத்தை காத்தருளும் பூரி ஜெகந்நாதரை முறைபப்டி வணங்கி, பூஜைகள், சடங்கு சம்பிரதாயங்களை செய்த பிறகே, கஜானாவை திறக்கும் பணி தொடங்கப்படும்.
பூரி ஜெகந்நாதரின் கருவூலம்
பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலின் நிர்வாகம், மாநில அரசின் சட்டத் துறையின் கீழ் உள்ளது. 2018 ஆம் ஆண்டில், அப்போதைய சட்ட அமைச்சர் பிரதாப் ஜெனா, ரத்னா பண்டரில் 12,831 எண்ணிக்கையில் (தலா 11.66 கிராம்) தங்க நகைகள் இருப்பதாக சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த் நகைகளில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 22,153 வெள்ளி பாத்திரங்கள் உட்பட விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன.
மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா... சனியின் அருளை பெற உதவும் நீலக்கல்..!!
இரு பகுதிகளாக பிரிக்கப்பட்ட கருவூலம்
கோவிலின் கஜானா, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கஜானாவின் வெளிப்புற பகுதி திறந்த நிலையில் உள்ள நிலையில், அதன் உள் பகுதி ரகசியமானதாக அமைக்கப்பட்டுள்ளது. ரத்ன பண்டார் என அழைக்கப்படும் உட்புற கஜானாவில் கோவிலின் குடி கொண்டிருக்கும் கடவுளர்கள் ஜெகநாதர், பலராமர் மற்றும் சுபத்ராவின் விலையுயர்ந்த நகைகள் உள்ளன.
இந்த ஆபரணங்களை, கோவில் கட்டிய காலம் முதற்கொண்டு பல்வேறு மன்னர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களும் கொடுத்துள்ளனர். இந்த ஆபரணங்கள் ஜகந்நாதரின் ரத யாத்திரை போன்ற விசேஷ சமயங்களில் கடவுள்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 46 ஆண்டுகளாக உட்புற கஜானாவான ரத்ன பண்டார் திறக்கப்படவில்லை.
கடைசியாக 1978 ஆம் ஆண்டு மே 13 முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை ரத்னா பண்டார் திறக்கப்பட்டபோது, அங்கு இருந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டன. இதன்படி, சுமார் 128 கிலோ தங்கமும், 222 கிலோ வெள்ளியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பல தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | காலே போனாலும் கடமையாற்றும் சனீஸ்வரர்! இராவணனுக்கு செக் வைத்த மாந்தியின் அப்பா!
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ