Astro Predictions 2023 February 03: இன்றையை கிரக நிலைகள் மற்றும் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 2023 பிப்ரவரி 3ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கான தின பலனைஅறிந்து கொள்ளலாம்.
மேஷம் - திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.
தன்னம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதீத நம்பிக்கையில் தவறான முடிவுகள் எடுக்கக் கூடும். எனவே, எச்சரிக்கை தேவை. வீட்டில் நெருங்கியவர்களுடன் எந்த ஒரு விஷயத்திலும் மனஸ்தாபம் ஏற்பட்டால், அதற்கு மேல் காற்று கொடுக்காமல், அமைதியாக இருப்பது அனைவருக்கும் நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உணவு விஷயத்தில் கவனம் தேவை. இதனால் எதிர்கால பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களின் பணியிடத்தில் மேலதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதால், பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவின் மூலம் நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள். உணவில் இலகுவான மற்றும் செரிக்கக்கூடிய உணவை உண்ண முயற்சி செய்யுங்கள். இதனுடன், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் வயிற்று உபாதைகள் ஏற்படலாம்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகளால் பணி சுமைகளை சந்திக்க நேரிடும். மனதளவில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை உண்டாகும். தடைபட்ட சில நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள். அலங்காரப் பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் தொழிலதிபர்களுக்கும் இது லாபகரமான நாளாகும். திருமணமாகாதவர்களுக்கு உறவுகள் கூடி வரும். ஆனால் அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அதற்காக நீங்கள் பின்னர் வருந்த வேண்டியிருக்கும்.
கடகம் - கடக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும், அதிக வேலை இருக்கும் போது திட்டமிட்டு செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட மக்கள் உங்களுக்கு உதவுவார்கள், எனவே அனைவருடனும் இணக்கமாக இருங்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சிந்தனையின் போக்கில் குழப்பம் நீங்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
மேலும் படிக்க | உதயமாகும் குருவினால் சித்திரையில் சீரும் சிறப்பும் பெறும் ‘சில’ ராசிகள்!!
சிம்மம் - பூர்வீக சொத்துக்களின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.இளைஞர்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றுங்கள். அதிக வேலை காரணமாக உடல் சோர்வை உணரலாம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் பணிச்சுமை அதிகமாக இருக்கும், அதனால் அவர்களால் தனக்கென குறைந்த நேரத்தையே ஒதுக்க முடியும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். சிக்கல் குறையும் நாள். எனினும், உடல்நலம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். இல்லையெனில் நீங்கள் உடல்நலப் பிரச்சினைகளால் சூழப்படலாம்.
துலாம் - இந்த ராசிக்காரர்கள் உத்தியோகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல், பணியை விடாமுயற்சியுடன் செய்யுங்கள். எதிர்பார்த்த சில பணிகள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். பெரியோர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள். இளைஞர்கள் நேரத்தை ஒதுக்கி தங்களுக்கு விருப்பமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்திற்கான நேர்மறை ஆற்றலைக் திரட்ட முடியும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் பழைய நோய்கள் மீண்டும் தாக்கக்கூடும்.
விருச்சிகம் - விருச்சிகத்தின் வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். அனுபவம் கிடைக்கும் நாள். குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சேமிப்புக்கும் செலவுக்கும் இடையில் சமநிலை இருப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல்நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டும். மருந்துகளை உட்கொள்வதில் அலட்சியம் காட்டாதீர்கள்.
மேலும் படிக்க | மகரத்தில் உருவாகும் புத-ஆதித்ய யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!
தனுசு - இந்த ராசிக்காரர்கள் இன்று மனதளவில் கடினமான வேலைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உத்தியோகபூர்வ வேலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இலக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். பணிவு வேண்டிய நாள். நீங்கள் உங்கள் வாகனத்துடன் நீண்ட பயணத்திற்குச் செல்கிறீர்கள் என்றால், அதை சர்வீஸ் செய்யுங்கள்.பயணத்தின் போது வாகனம் பழுதடைவதால் சிக்கல் ஏற்படலாம்.
மகரம் - இன்று மகர ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு சாதகமான பலன்கள் விரைவில் கிடைக்கும். புதிய உறவில் இளைஞர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளது, நட்பாக இருந்தாலும், காதலாக இருந்தாலும் எந்த உறவிலும் அவசரம் காட்டுவது சரியல்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தில் எல்லோருடனும் நேரம் செலவிடும் வாய்ப்பு. மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். உடல்நிலையில் சற்று உஷாராக இருங்கள், வானிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு ஆளாக நேரிடும்.
மேலும் படிக்க | உதயமாகும் குரு! ஹன்ஸ ராஜயோகம் பெறும் ‘சில’ ராசிகள்!
கும்பம் - இந்த ராசிக்காரர்கள் மேலதிகாரிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் மற்றவர்களின் தவறான வழிகாட்டுதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எழுத்து தொடர்பான துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள். அலுவலக வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பது உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பளிக்கும். சருமம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
மீனம் - மீன ராசிக்காரர்கள் உத்தியோகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட கூடும். சக ஊழியர்களுடனான உறவும் வலுப்பெறும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். மனை விற்றல், வாங்கலில் லாபம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். இளைஞர்களின் பணிக்காக செய்த திட்டமிடல் வெற்றியளிப்பதாகத் தெரிகிறது. குடும்பத்தின் தேவைகளை மனதில் வைத்து, எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க நினைத்தால், இன்றைய நாள் சரியான நாளாகும். ஏதேனும் மருந்துக்கு பக்கவிளைவு அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். மருத்துவரிடம் கேட்காமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ