பல ஆண்டுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ யோகம், இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Tirgrahi Yog in Scorpio 2023: ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசியில் அபூர்வ திரிகிரஹி யோகம் உருவாகி வருகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் விருச்சிக ராசியில் கூடி இருப்பது மிகவும் சுப யோகத்தை உருவாக்குகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 21, 2023, 11:32 AM IST
  • மூன்று முக்கிய கிரகங்களும் விருச்சிக ராசியில் இருக்கும்.
  • திரிகிரஹி யோகம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம்.
பல ஆண்டுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ யோகம், இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் title=

விருச்சிக ராசி திரிகிரஹி யோகம் 2023: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றி மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப மற்றும் அசுப யோகத்தை உருவாக்குகிறது. அந்த வகையில் இந்த மாதம் விருச்சிக ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. விருச்சிக ராசியில் சூரியன், செவ்வாய், புதன் இருப்பது திரிகிரஹி யோகத்தை உருவாக்குகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மூன்று முக்கிய கிரகங்களும் விருச்சிக ராசியில் இருக்கும் போது இப்படி ஒரு அபூர்வ யோகம் உருவாகியுள்ளது. இப்படியாக விருச்சிக ராசியில் இந்த கிரகங்கள் இணைவதால் உருவாகும் சக்தி வாய்ந்த திரிகிரஹி யோகம் 12 ராசிகளிலும் (12 Zodiac Sign) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அதிக பலன் அடைவார்கள். இந்நிலையில் இந்த திரிகிரஹி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

திரிகிரஹி யோகம் இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும்:

சிம்மம் (Leo Zodiac Sign): இந்த திரிகிரஹி யோகம் (Tirgrahi Yog in Scorpio 2023) சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமானதாக இருக்கும். புதிய வீடு அல்லது புதிய வாகனம் போன்ற மகிழ்ச்சியை சிம்ம ராசிக்காரர்கள் பெறலாம். சமீபத்தில் கிடைத்த பணம் முதலீடு செய்ய உங்களை ஊக்குவிக்கும். பொருள் சுகம் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கலாம். குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட வேலைகளில் வேலை செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மரியாதை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சனி குரு உச்சம்.. 2024ல் கோடீஸ்வர யோகம் பெற போகும் ராசிகள் எவை

மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் மிகவும் சுப பலன்களைத் தரும். மகர ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வருமானத்தில் பெரிய அதிகரிப்பு உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உண்டாகும். அற்புதமான தன்னம்பிக்கை இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தடைபட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். அரசு வேலைக்கு தயாராகும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் அமைவது சுப பலன்களைத் தரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, லாபம் நிச்சயம் பெறுவீர்கள். கும்ப ராசிக்காரர்களின் தற்போதைய வேலையில் புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். ஒரு பெரிய ஒப்பந்தம் முடிவடைய வாய்ப்புகள் உள்ளன. வாகனங்கள், சொத்துக்கள் வாங்கலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நேரம். விரும்பிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் சூரியன்! கன்னி உட்பட 3 ராசிக்காரர்களுக்கு ஆபத்து!

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News