ராகு பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். ராகு கேது எப்போதும் வக்ர நிலையில், அதாவது தலைகீழ் இயக்கத்தில் பயணிக்கிறார்கள். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல் ராகு கேது பெயர்ச்சியும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வரும்.
மக்கள் அச்சப்படுவதை போல, ராகு-கேதுவின் மாற்றம் எப்போதும் அசுப பலன்களை மட்டுமே தருவதில்லை. இவற்றின் மாற்றத்தால் சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். சில நேரங்களில் இந்த கிரகங்களின் மாற்றம் சில ராஜயோகங்களையும் உருவாக்குவதுண்டு. அக்டோபர் 30, 2023 அன்று ராகுவும் கேதுவும் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. 18 மாதங்களுக்குப் பிறகு ராகு தனது ராசியை மாற்றுவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுவின் (Rahu Transit) இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ராகு ராசி மாற்றத்தால் மகிழ்ச்சி மழையில் நனையவுள்ள ராசிகள்
மிதுன ராசி (Gemini)
ராகுவின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களின் 10ம் வீட்டை பாதிக்கும். இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ராகு உங்கள் மீது நல்ல செல்வாக்கு செலுத்துவார். இந்த நேரத்தில், நிதி ஆதாயம் பெரும் வாய்ப்பு இருக்கும். சமுதாயத்தில் உங்கள் கௌரவம் உயரும், அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும். இந்த நேரத்தில் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். அனைத்து விததமான பிரச்சனைகளும் தீர்ந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.
துலா ராசி (Libra)
ஜோதிட சாஸ்திரப்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாகவும், நல்ல பலன்களைத் தரும் வகையிலும் இருக்கும். ராகு பெயர்ச்சிக்குப் பிறகு துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். இதன் காரணமாக வாழ்வில் பல வித நன்மைகள் நடக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அபரிமிதமான பண பலன்களைப் பெறுவார்கள். அதே சமயம் எங்காவது முதலீடு செய்திருந்தாலும், நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சில மத ஸ்தலங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி மிக சாதகமாக இருக்கும்.
மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பிறகு கும்ப ராசியில் சனி உச்சம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டும்
விருச்சிக ராசி (Scorpio)
ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் 30-ம் தேதி ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ராகு பெயர்ச்சி ஆன பிறகு, நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். பணியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சிக்கான வழிகளும் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பெரும் லாபம் உண்டாகும்.
தனுசு ராசி (Sagittarius)
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராகுவின் இந்த பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். ராகு சஞ்சாரத்தின் விளைவாக, உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வீடு, குடும்பம் மற்றும் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் தற்போது அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கு அதிஷ்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ