கும்பத்தில் சனி அஸ்தமனம்: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது அஸ்மனமாகும், பின்னர் உதயமாகும். கிரகங்களின் அஸ்தமன மற்றும் உதயமாகும் நிலைகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் பெயர்ச்சியானார். அதன் பின்னர், ஜனவரி 30 ஆம் தேதி இரவு அஸ்தமனமாகியுள்ளார். இனி, மார்ச் 5 ஆம் தேதி அவர் உதயமாவார்.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஆதாயமும் முன்னேற்றமும் அடைய வாய்ப்புள்ளது. இந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்
சனி பகவானின் அஸ்தமன நிலை மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் இவர்களது ஜாதகத்தில் 8 மற்றும் 9 ஆம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். ஆகையால், இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இவர்களுக்கு இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
அதே சமயம் சமயப் பணிகள் மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் புனித யாத்திரைக்கும் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்கள் வழக்கத்தை விட கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவார்கள்.
மேலும் படிக்க | புதன் பெயர்ச்சியால் எதிரிகளால் ஆபத்து! அலர்டாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மகரம்
சனி பகவான் அஸ்தமனமாவது மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஏனெனில் சனிபகவான் உங்கள் ராசியிலிருந்து பணம் மற்றும் பேச்சு ஸ்தானத்தில் அஸ்தமனமாகிறார். ஆகையால், பண வரவு இருந்துகொண்டே இருக்கும்.
இதனுடன், இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆனால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அதேசமயம் உங்கள் ராசியை சனி பகவான் ஆட்சி செய்கிறார். ஆகையால் சனி பகவானின் அஸ்தமன நிலை உங்களுக்கு சாதகமாக அமையும்.
மீனம்
சனி பகவானின் அஸ்தமனம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமைவதால் சில விஷயங்களில் இருந்து வந்த அழுத்தங்களிலிருந்து சற்று நிம்மதி கிடைக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறலாம்.
மறுபுறம், ஜனவரி 17 முதல் உங்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கியுள்ளது. ஆகையால், சனி பகவான் அஸ்தமனமாவதால், உங்கள் மீது உள்ள அசுப பலன்கள் குறையும். இதனால் மன அமைதி பெறுவீர்கள். இதனுடன், உங்கள் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ