சனி உதயம்: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.... பொற்காலம் ஆரம்பமானது

Shani Uday 2024: மார்ச் 18, 2024 அன்று சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உதயமானார். சில ராசிக்காரர்களுக்கு சனி உதயம் சுப பலன் உண்டாகும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சாதகமாக பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 21, 2024, 06:04 PM IST
  • வியாபாரிகளும் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள்.
  • வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.
  • சம்பள உயர்வு பெறுவீர்கள்.
சனி உதயம்: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.... பொற்காலம் ஆரம்பமானது title=

Shani Uday 2024: ஜோதிடத்தில், சனி கிரகத்திற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. அதுமட்டுமின்றி கிரங்களிலே மிகவும் மெதுவாக நகரும் சனி ஆகும். அதேபோல்  சனி பகவானை நாம் நீதியின் கடவுள் என்று அழைக்கிறோம், ஏனெனில் கலியுகத்தில் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் (Lord Shan) தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியில் தான் இருப்பார். பிப்ரவரி 11 ஆம் தேதி சனிபகவான் அஸ்தமன நிலைக்கு சென்றார். தற்போது கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாமானார். சனி பகவானின் சிறிய அசைவுகள் கூட ஜோதிடத்தில் மிகவும் பெரிய நிகழ்வாகக் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் சனியின் உதயம் பல ராசிக்காரர்களுக்கு தாக்கம் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் சாதாகமான பலன் கிடைக்கும் | Shani Uday 2024 Luck To These Zodiac Signs :

1. மேஷம் (Aries Zodiac Sign): 
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல தொடர்புகளை பெறலாம். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமின்றி நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய பொருளை இந்த நேரத்தில் வாங்குவீர்கள். பொருள் வசதிகள் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த குழப்பமான சூழல் நீங்கும். வியாபாரிகளும் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள்.

மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சக்கைப்போடு போடவுள்ள ராசிகள் இவைதான்... உங்க ராசி என்ன?

2. ரிஷபம் (Taurus Zodiac Sign):
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலில் பொன்னான வாய்ப்புகளை பெறுவீர்கள், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். முதலாளியை மகிழ்விக்க முயற்சிப்பீர்கள், மேலும் அதில் வெற்றியும் அடைவீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். எனினும் சில வேலையில் மிகுந்த கவனம் வேண்டும், மேலும் முழு கடின உழைப்புடனும் வேலை செய்ய வேண்டியிருக்கும், இது நல்ல பலனைத் தரும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். 

3. கன்னி (Virgo Zodiac Sign):
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் தொழில் மேலோங்கும், சட்ட ஆலோசகர், வழக்கறிஞர், நீதிபதி அல்லது நீதிமன்றத்தில் பணிபுரிபர்களுக்கு நல்ல சூழ்நிலை இருக்கும். சனி அஸ்தமனத்தின் போது குறைந்த சக்தியை உணர்ந்தவர்கள் தற்போது நல்ல உற்சாகத்துடன் இருப்பீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிபெண்களை பெற்று வெற்றி பெறுவார்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும், மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவீர்கள். 

4. துலாம் (Libra Zodiac Sign): 
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், சில சமய மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். வியாபாரம் செய்பவர்களின் நெட்வொர்க் அதிகரிக்கும், இதனால் பண வரவு அதிகரிக்கும். வியாபாரிகளுடன் நல்ல ஒப்பந்தத்தை பெறுவீர்கள். கடினமாக உழைத்தால் தொழிலில் லாபம் பெருகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உதயமானார் சனி: இந்த ராசிகளுக்கு இனி சுகம் மட்டுமே... சோதனைகளை விரட்டிவிட்டார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News