Monthly Horoscope of June 2024: ஜோதிட சாஸ்தின்படி, ஜூன் மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசிகலையும் இயக்கங்களையும் மாற்றவுள்ளன. நாளை ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. ஜூன் மாதத்தில் நடக்கவுள்ள கிரகங்களின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும், இவர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்கள் கிடைக்கும். கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிட ரீதியாக இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.
குறிப்பாக, ஜூன் மாதத்தில், செல்வத்தின் அன்னையான லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் சில ராசிகளில் சிறப்பாக இருக்கும். ஏனெனில் ஜூன் மாத தொடக்கத்தில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் அமைவதால் 5 ராசிக்காரர்களுக்கு மாதம் முழுவதும் மகிழ்ச்சி உண்டாகும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனம் அமைதியாக இருக்கும். ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் செல்ல திட்டமிடலாம், அந்த திட்டம் வெற்றியடையும். வியாபாரம் செய்பவர்கள் பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்கள் தினசரி வழக்கத்தையும் ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.
மிதுனம் (Gemini)
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். தொழில்துறையிலும் பணி இடத்திலும் புதிய உச்சத்தை தொடுவீர்கள். மேலும், உழைக்கும் மக்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். ஜூன் முதல் வாரத்திற்கு பிறகு ஆரோக்கியம் மேம்படும். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பயணங்கள் மூலம் மகிழ்ச்சி அடையலாம்.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்ளுக்கு அன்னை லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். இருப்பினும், உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். பிறரிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்
துலாம் (Libra)
ஜூன் மாதம் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். லட்சுமி தேவியின் அருளால் வருமானம் பெருகும். ஆனால் செலவுகளும் அதிகரிக்கலாம். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் நிதி நெருக்கடி ஏற்படும். உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செல்வம் குவியும். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்கள் தங்கள் விருப்பப்படி வேலை வாய்ப்பைப் பெறலாம். உங்கள் சம்பளம் உயரும்.
மகரம் (Capricorn)
ஜோதிடத்தின்படி, மகர ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமி தனது ஆசிகளைப் பொழிவார். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலும், பேச்சில் இனிமை நிலைத்திருக்கும். சில நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அனைத்து பணிகளிலும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சேரும் கிரகங்களின் தன்மைக்கேற்ப பலனை மாற்றிக் கொடுக்கும் புத்திசாலி புதன் பெயர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ