நாளும் கோளும் வாழ்க்கையை மாற்றியமைக்கும்! எதிர்வரும் வாரத்திற்கான ராசிபலன்!

Upcoming Week Rasipalan : எதிர்வரும் வாரத்திற்கான (29 ஜூலை முதல் 4 ஆகஸ்ட் 2024) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்... இது 12 ராசிக்காரர்களுக்குமான ராசிபலன்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 26, 2024, 01:58 PM IST
  • மகர ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்
  • கும்ப ராசிக்காரர்களுக்கு கல்விக்கான வாய்ப்பு
  • மீன ராசியினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும்
நாளும் கோளும் வாழ்க்கையை மாற்றியமைக்கும்! எதிர்வரும் வாரத்திற்கான ராசிபலன்! title=

வரும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொண்டு செயல்பட்டால் வாரம், வரம் கொடுக்கும், நல்லதாக இருக்கும். ஜூலை 31 ஆம் தேதி, செல்வம், ஆடம்பரம் மற்றும் காதலுக்கு அதிபதி சுக்கிரன் தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். வாரத்தின் முதல் நாளான ஜூலை 29ம் தேதியன்று கஜகேசரி யோகம் உருவாகிறது. இப்படி பல்வேறு ஜோதிட நிலைகள் மற்றும் கிரக சஞ்சாரங்களின் அடிப்படையில் இந்த வார ராசிபலன் கணிக்கப்பட்டுள்ளது.

மேஷம் வார ராசிபலன்: வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டால், மனக்குழப்பங்களைத் தவிர்க்கலாம். வேலையில் பணி மாற்றம்,  இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டை சீரமைக்கும் பணிகளுக்கு பணம் செலவழிக்க நேரிடும்.

ரிஷபம் வார ராசிபலன்: தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் விரிவாக்கம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

மிதுனம் வார ராசிபலன்: புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். சாதகமான இடத்தில் புதன் இருப்பதால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் துள்ளும். பண வரத்து அதிகரிக்கும்.

மேலும் படிக்க | ஆடியில் ஆலகால விஷம் அருந்திய நீலகண்டன் சிவனுக்கு காவடி! கங்கை நீரால் அபிஷேகம்!!

கடகம் வார ராசிபலன்: கூட்டாண்மை மூலம் செய்யப்படும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பணம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு பெரிய ஒப்பந்தம் இருக்கலாம்.

சிம்மம் வார ராசிபலன்: பங்குச் சந்தை லாபம் கொடுக்கும், முதலீடு செய்வதால் நிதி ஆதாயம் பெருகும், மனதில் உள்ள கவலைகள் நீங்கும்.

கன்னி வார ராசிபலன்: தொழில் விருத்தி செய்ய நல்ல நேரம் இது, சொத்துக்கள் வாங்க அல்லது விற்க சரியான நேரம் இது ஆடம்பரத்திற்காக பணம் செலவழிப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.

துலாம் வார ராசிபலன்: ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும், பணம் செலவழிக்க வாய்ப்பு உண்டு. கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிகம் வார ராசிபலன்: வியாபாரம், வேலை நன்றாக நடக்கும். பெரிய நிதி ஆதாயத்திற்கான அறிகுறிகள் தென்படுகிறது, வராமல் தேங்கி நின்ற பணங்கள் வருவதால் நிதி புழக்கம் நன்றாக இருக்கும், சுப காரியங்களுக்கு பணம் செலவழிக்க நேரிடும்.

மேலும் படிக்க | சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!

தனுசு வார ராசிபலன்: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆரோக்கியத்திற்காக பணம் செலவழிக்கப்படலாம். நீங்கள் கடனாகப் பெற்ற பணத்தைப் பெறலாம்.

மகரம் வார ராசிபலன்:  ஆதிக்க மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. மனதில் சோர்வு உண்டாவதைத் தவிர்க்கும் வழிகளை தெரிந்துக் கொள்ளுங்கள். சம்பளம் உயரும் வாய்ப்பு உண்டு.

கும்பம் வார ராசிபலன்: பொன்பொருள் சேரும் நேரம் இது, பண வரத்து சாதகமாக இருக்கும் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சுப செலவுகள் செய்ய வேண்டியிருக்கும், அதேபோல பணவரத்து நன்றாக இருக்கும் நேரத்தில் கடனை திருப்பிக் கொடுத்து நிம்மதியாக இருக்கலாம்.

மீனம் வார ராசிபலன்: பழைய கடனைத் திருப்பிச் செலுத்தும் கட்டாயம் ஏற்படுவதால், புதிய கடன் வாங்க வேண்டியிருக்கும். வருமான ஆதாரங்கள் நிலையானதாக இருப்பதால் கவலைப்பட வேண்டாம். ஆனால், புதிய தொழில் முயற்சி எதையும் இப்போது எடுக்க வேண்டாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செல்வமகள் லட்சுமியின் செல்லப்பிள்ளைகளாக மாற இதெல்லாம் உங்க வீட்ல இருக்கா? தேடிவந்த ஆடிவெள்ளி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News