இந்த 5 ராசிகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவார் புதன்

புதன் கிரகத்தின் ராசி மாற்றத்தால் சிலரது வாழ்வில் பிரச்சனைகள் வரப் போவதாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 9, 2022, 04:33 PM IST
  • கன்னி ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • மகர ராசிக்காரர்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • உத்தியோகத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.
இந்த 5 ராசிகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவார் புதன் title=

ஜோதிடத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனமான கிரகமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. அதேபோல் யாருடைய ராசியில் புதன் கிரகம் சுப ஸ்தானத்தில் அமைந்திருக்கிறாரோ, அந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஆனால் அவர்களின் நிலை மோசமடைந்தால், அந்த ராசிக்காரர்களுக்கு சிக்கலை உருவாக்குகிறது. அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்ட் 01, 2022 ஆம் தேதி அன்று, புதன் கிரகம் கடக ராசியை விட்டு வெளியேறி சிம்ம ராசியில் பிரவேசித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 21 வரை புதன் இந்த ராசியில் இருப்பார். புதன் கிரகத்தின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

இந்த நிலையில் புதன் கிரகம் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு

கன்னி
சிம்ம ராசியில் புதன் நுழைந்ததால் கன்னி ராசிக்காரர்களுக்கு பணச் சிக்கல்கள் ஏற்படும். உண்மையில் புதனின் பெயர்ச்சி இந்த முறை 12 ஆம் வீட்டில் இருப்பதால் அது நிதி ரீதியாக இருக்கும். அதன்படி இந்த ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 

மகரம்
மகர ராசிக்காரர்கள் பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும், எந்த வகையிலும் முதலீடு செய்வதற்கு முன் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோல் குடும்பத்தில் தகராறு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. 

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் ஏழாவது வீட்டில் புதன் இருக்கிறார். இது உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் வணிகத்தை பாதிக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மறுபுறம் உத்தியோகத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.

மீனம்
இந்த ராசிக்காரர்கள் ஆறாம் வீட்டில் புதன் கிரகம் அமர்ந்திருக்கிறார். மீன ராசிக்காரர்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் செலவுகளை தவிர்க்கவும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News