சுக்கிரன் அருளால் அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு அமர்க்களமாய் இருக்கும்: உங்க ராசியும் இதுவா?

Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் ஏறப்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2023, 04:18 PM IST
  • சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி அடைவார்கள்.
  • நடக்காமல் முடங்கி இருக்கும் வேலைகளும் இந்த காலகட்டத்தில் முடிக்கப்படும்.
  • சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வருமானத்தை அதிகரிக்கும்.
சுக்கிரன் அருளால் அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு அமர்க்களமாய் இருக்கும்: உங்க ராசியும் இதுவா? title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகள் மற்றும் நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கும். அப்படி கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்போது அதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. பல பெரிய கிரகங்கள் அக்டோபரில் தங்கள் நிலைகளை மாற்றவுள்ளன. இவற்றில் ஒன்று, செல்வத்தையும் செழிப்பையும் அளிக்கும் சுக்கிரன். 

அக்டோபர் 2 ஆம் தேதி, சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்த நபருக்கு அனைத்து வித செல்வங்களும், மரியாதையும், புகழும் கிடைக்கும். அதே சமயம் சுக்கிரன் வலுவிழந்த நிலையில் இருந்தால், அந்த நபரின் மகிழ்ச்சி குறையும். ஜோதிட சாஸ்திரப்படி தற்போது சுக்கிரன் கடக ராசியில் அமர்ந்து அக்டோபர் 2ம் தேதி சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். அனைத்து கிரகங்களையும் போல சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் ஏறப்டும். இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வருமானமும், அதிர்ஷ்டமும் பெருகும். வரும் அக்டோபர் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கப் போகிறது.

சுக்கிரன் பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் அமர்க்களமாய் இருக்கப்போகும் ராசிகள்

ரிஷப ராசி

சிம்ம ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசியை ஆளும் கிரகம் குரு என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ரிஷப ராசிக்காரர்களின் தெய்வம் துர்கை அன்னை. இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து வித மகிழ்ச்சியையும் பெறுவார்கள். இதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களுக்கு வசதிகளும், வாய்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சுப காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | துலாமில் செவ்வாய்... ருசக யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்!

சிம்ம ராசி

இந்த ராசியின் அதிபதி கிரகம் சூரியன் ஆவார். இவர்களுக்கான ராசி தெய்வம் மகாவிஷ்ணு. சிம்ம ராசிக்காரர்களுக்கு உலகையே வென்ற இறைவன் பரந்தாமனின் சிறப்பு அருள் எப்போதும் உண்டும். சுக்கிரன் பெயர்ச்சி காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் தங்கள் விருப்பப்படி வெற்றியை அடைவார்கள். மேலும், நடக்காமல் முடங்கி இருக்கும் வேலைகளும் இந்த காலகட்டத்தில் முடிக்கப்படும். இதுமட்டுமின்றி சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வருமானத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் வேகம் பெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த நேரத்தில் திருமணம் நிச்சயிக்கப்படலாம். மொத்தத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நன்மை பயக்கும்.

துலா ராசி

ஜோதிட சாஸ்திரப்படி துலா ராசிக்காரர்களை ஆளும் கிரகம் சுக்கிரன். மேலும் இவர்களது அபிமான தெய்வம் துர்கை அன்னை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் துலா ராசிக்காரர்களுக்கு அன்னை துர்க்கையின் சிறப்பு ஆசிகள் விசேஷமாக இருக்கிறது. இதுமட்டுமின்றி துலாம் ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் சிறப்பான மகிழ்ச்சியைப் பெறுவார்கள். துலாம் ராசிக்காரர்கள் அக்டோபரில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் தொடர்புடையவர்களும் இந்த நேரத்தில் நன்மை அடைவார்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு அவர்களின் மாமியாருடன் ஒத்து போகாது..! யார் அவர்கள்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News