Mangalya Dosham: ஆண்களுக்கான மாங்கல்ய தோஷமும் அதற்கான பரிகாரங்களும்

Hurdles in Marriage as per Astro: மாங்கல்ய தோஷம் என்பது பெண்களுக்கு மட்டுமானதல்ல, ஆண்களுக்கும் உண்டு. ஆண்களுக்கான மாங்கல்ய தோஷமும் அதற்கான பரிகாரங்களும் என்ன என தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2022, 04:41 PM IST
  • இரு மனங்களின் சங்கமமான திருமணத்திற்கு ஏற்படும் தடைகளும் பரிகாரங்களும்
  • ஆண்களுக்கான மாங்கல்ய தோஷமும் அதற்கான பரிகாரங்களும்
  • ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் இருக்கக்கூடாத கிரகங்கள்
Mangalya Dosham: ஆண்களுக்கான மாங்கல்ய தோஷமும் அதற்கான பரிகாரங்களும் title=

Marriages Made by Horoscope: இரு மனம் இணைந்த திருமண வாழ்க்கை வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக இருக்கிறது. திருமண வாழ்க்கையின் ஆணிவேரான திருமணம் சிலரின் வாழ்க்கையில் சரியான காலத்தில் நடைபெறுவதில்லை. அதற்கு காரணங்கள் பல இருந்தாலும், ஜோதிட ரீதியாக சில காரணங்கள் உண்டு.

கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணிகளால், திருமணம் தாமதமாகும் அல்லது தடை உண்டாகும். பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். 

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தை மாங்கல்ய ஸ்தானம் என்று சொல்கிறோம். மாங்கல்ய தோஷம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில், மாங்கல்ய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சனி , ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் மாங்கல்ய தோஷம் என்கிறோம். அதாவது, ஒருவரின் ஜாதகத்தில் 8-ஆம் இடத்தில் மேற்கூறிய கிரகங்கள் இருந்தால் கெடுபலனையே தரும்.

மேலும் படிக்க | இன்று குரு பூர்ணிமா; உருவாகும் ராஜ யோகம், யாருக்கு பண மழை 

இந்த கிரகங்கள் எட்டாம் இடத்தில் இருந்தாலும், அவை, அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் இல்லை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். அதேபோல, எட்டாம் இடத்தில், குரு, சுக்கிரன் பார்வை இருந்தால், தோஷம் இருந்தாலும் அது நிவர்த்தியாகிவிட்டதாக கருதப்படுகிறது.

திருமணம் செய்யும் ஆண் பெண் இருவருக்கும் இதே மாதிரியான அமைப்பு இருந்தால், இவர்கள் இணை பிரியாத தம்பதியர்களாக, மனமொத்த வாழ்க்கை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

எட்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷம் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில், முருகனை நினைத்து, விரதம் இருந்து வழிபடவேண்டும். செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜைகள்  செய்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

மாங்கல்ய ஸ்தானத்தில் ராகு மற்றும் கேது இருந்தால் அது ராகு தோஷம் என்று அறியப்படுகிறது. திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ராகு கேதுவின் தலங்களுக்கு சென்று வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்குவது நல்ல பலன் தரும். 

மாங்கல்ய ஸ்தானத்தில் சூரியன் இருந்தால் அது சூரிய தோஷம் எனப்படுகிறது. சூரிய தோஷம் உள்ளவர்கள் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் சொல்லி கடவுளை துதிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும் நல்ல பலன் தரும்.

ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிப்பதும் மனம் போல திருமண வாழ்க்கை அமைய உதவும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News