Mahashivratri 2024: மஹாசிவராத்திரி நாள் இந்துக்களின் முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவன் மற்றும் பார்வதியை வழிபடுவதோடு விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. மஹாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபட பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். மகா சிவராத்திரி திருவிழா நாடு முழுவதும் மகத்தான உற்சாகத்துடனும், சிறப்புடனும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானை மகிழ்விக்க, பக்தர்கள் அவருக்கு பால், தயிர் மற்றும் பேல்பத்ரா போன்றவற்றை வழங்குகிறார்கள். மஹாசிவராத்திரி விரதத்தின் போது பக்தர்கள் டீ, தண்ணீர், காபி, தேங்காய் தண்ணீர், லஸ்ஸி, பழச்சாறு மற்றும் உப்பு இல்லாத உலர் பழங்கள் போன்ற பானங்களை உட்கொள்ளலாம்.
சிவபெருமான் கருணையின் கடவுளாகவும் கருதப்படுகிறார். சிவபெருமானை யார் உண்மையான மனதுடன் வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு அவர் எப்போதும் அருள்புரிவார் என்பது ஐதீகம். இந்த தினத்தில் விரதம் இருக்க நினைப்பவர்கள் காலையில் தண்ணீர் குடித்து விரதத்தை தொடங்கலாம். மஹாசிவராத்திரி வழிபாட்டில் வண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. மகாசிவராத்திரி வழிபாடு தொடர்பான சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். மஹாசிவராத்திரி பூஜையின் போது தவறான நிற ஆடைகளை அணிந்தால், பூஜை பலன் தராது.
சிவபெருமானை வணங்கும் போது பெண்கள் எந்த நிற புடவை அணிய வேண்டும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் போன்ற சம்பிரதாயங்கள் உள்ளன. சிவபெருமானை வணங்கும் போது பெண்கள் எந்த நிற புடவை அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன் படி ஆடை அணிவது நல்லது. பெண்கள் மட்டும் இன்றி ஆண்களும் எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எந்த நிற புடவை அணிவது நல்லது?
இந்து மத நம்பிக்கையின்படி, சிவபெருமானுடன் தொடர்புடைய ஒவ்வொரு வழிபாட்டிலும் பச்சை நிறம் பயன்படுத்த வேண்டும். வேத சாஸ்திரங்களின்படி, பச்சை நிறம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானதாக கூறப்படுகிறது. எனவே, மஹாசிவராத்திரியின் ஒவ்வொரு வழிபாட்டிலும் பச்சை நிற ஆடைகளை அணிவது நல்லது. இந்த பச்சை நிறம் நேர்மறை ஆற்றலை வழங்குகிறது. எனவே, இந்த விழாவில் பச்சை நிறத்தை அணிவதன் மூலம், பக்தர்கள் பல பலன்களைப் பெறுகின்றனர். இது தவிர, பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது ஒரு நபரை நேர்மறையாக உணர வைக்கிறது.
மகாசிவராத்திரி நாளில் சிவபெருமான் வழிபாட்டின் போது, பெண்கள் பச்சை நிற சேலையையும், ஆண்கள் பச்சை நிற வேட்டி அல்லது டி-சர்ட்டை அணிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடைபெறும் என்று ஐதீகம். மகாசிவராத்திரி விழாவின் போது பச்சை நிறத்தைத் தவிர, சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு அல்லது வெள்ளை நிறங்களில் ஆடைகளை அணிவது மங்களகரமானது. மேலே குறிப்பிட்ட சில நிறங்களை தவிர வேறு எந்த நிறத்திலும் ஆடைகளை அணியக்கூடாது. மேலும், சிவபெருமானை வணங்கும் போது பருத்தி ஆடைகளை அணிந்து செல்வது நல்லது.
பெண்கள் இந்த நிறத்தில் புடவை அணியக்கூடாது?
மகாசிவராத்திரி பூஜையின் போது எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் மற்றும் எந்த நிற ஆடைகளை அணிய கூடாது என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மத நம்பிக்கையின்படி, சிவனை வழிபடும் போது கருப்பு நிற ஆடைகளை கண்டிப்பாக அணியக்கூடாது. கருப்பு நிறம் தவிர நீல நிற ஆடைகளையும் அணியக் கூடாது. இந்த இரண்டு நிறங்களிலும் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்று நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Maha Shivratri 2024: மஹாசிவராத்திரி அன்று என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ