மகரத்தில் உருவாகும் புத-ஆதித்ய யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

Mercury Transit 2023: மகர ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால், சூரியன் - புதன் சேர்க்கை புதாதித்ய யோகத்தை உருவாக்கும். மகர ராசியில் உருவாகும் புத்தாதித்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான சுப பலன்களைத் தரும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2023, 04:15 PM IST
  • புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புத ஆதித்ய யோகம்.
  • தொழில், வியாபாரம் இரண்டிலும் லாபம் உண்டாகும்.
  • வேலை செய்பவர்கள் பெரிய அளவில் வெற்றி பெறலாம்.
மகரத்தில் உருவாகும் புத-ஆதித்ய யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்! title=

மகர ராசியில் புதன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், கிரகங்களின் இளவரசன் புதன் பேச்சுத்திறன், தர்க்கம், உரையாடல், வணிகம் மற்றும் செல்வத்தின் காரணியாக விவரிக்கப்படுகிறார். வரும் பிப்ரவரி 7, 2023 அன்று புதன் பெயர்ச்சியாகப் போகிறது. புதன் ராசியை மாற்றி, சனியின் ராசியான மகரத்தில் நுழையும். இந்த நேரத்தில் சூரியன் மகர ராசியில் இருப்பதால் சூரியனும் புதனும் இணையும். எனவே, மகர ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால், சூரியன் - புதன் சேர்க்கை புதாதித்ய யோகத்தை உருவாக்கும். மகர ராசியில் உருவாகும் புத்தாதித்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான சுப பலன்களைத் தரும்.

மகர ராசியின் புத-ஆதித்ய யோகம் பணப் பலன்களை அள்ளித் தரும்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களுக்கு தொழிலில் பெரிய பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கான தேடல் மகிழ்ச்சியுடன் நிறைவடையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இந்த நேரம் எடுத்த ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்லலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

மிதுனம்:

புதனின் ராசி மாற்றம் மற்றும் புத ஆதித்ய யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கும் பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு பணம் தடையின்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரவினாலும் மகிழ்ச்சி அடைவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். முதலீடு மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செலவுகள் குறையும் என்பதால், சிறப்பாக சேமிக்கவும் முடியும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் பெரிய அளவில் வெற்றி பெறலாம் அல்லது சாதனைகளைப் படைக்கலாம். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தடை பட்ட வேலைகள் நிறைவேற ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க | உதயமாகும் குரு! ஹன்ஸ ராஜயோகம் பெறும் ‘சில’ ராசிகள்!

துலாம்:

புதன் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயத்தில் பலன்களைத் தரும். சொத்து வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுவடையும். பண வரவு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாயால் மகிழ்ச்சி கிடைக்கும்.

மீனம்:

புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புத ஆதித்ய யோகம் மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் உயர்வு இருக்கும். உத்தியோகத்தில் லாபம் உண்டாகும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக பெரும் நன்மை ஏற்படும். வங்கி இருப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் இரண்டிலும் லாபம் உண்டாகும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் இணையும் சூரியன் - குரு! ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News