புதனும் சனியும் எதிரெதிரே இருப்பதால் இந்த 4 ராசிகளும் அதிர்ஷ்டம்...

ஜோதிடத்தில் புதனும், சனியும் இப்போது எதிரெதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2023, 06:15 PM IST
  • எதிரெதிர் திசையில் பயணிக்கும் புதன் - சனி
  • 4 ராசிகளுக்கு அமோகமான காலம் பிறக்கிறது
  • தொழில் மற்றும் நிதிநிலமை மேம்படும்
புதனும் சனியும் எதிரெதிரே இருப்பதால் இந்த 4 ராசிகளும் அதிர்ஷ்டம்... title=

ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் எப்போதும் பயணத்திலேயே இருக்கும். அந்தவகையில் இப்போது புதனும் சனியும் 7ஆம் வீட்டில் எதிரெதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்து ராசிகளின் நிலையிலும் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் 4 ராசிகளுக்கு மட்டும் யோகமான காலமாக அமையப்போகிறது. இது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் மற்றும் பல வெற்றிகளை கொண்டு வரும் நேரம். 

அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்? என்று பார்க்கலாம்

மேஷம்

புதனும் சனியும் மேஷ ராசியில் அமைந்திருப்பது சிறப்பாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அவர்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். இக்காலகட்டத்தில் செய்யும் திட்டங்கள் வெற்றியடையும். தடைபட்ட பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். பிள்ளைகளுக்கு இருந்த பிரச்சனைகள் தீரும். சில முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

மேலும் படிக்க | நாளை முதல் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்... குருவால் பண மழை பெய்யும்

மிதுனம்

சனி மற்றும் புதன் பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். முக்கியமாக சனியின் அருளால் பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு இந்தக் காலகட்டம் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். வெளிநாட்டில் இருந்து அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சனியும், புதனும் பல நன்மைகளைத் தருகின்றன. இந்த நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தாயின் உடல்நிலை நன்றாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கு சனியும், புதனும் பலன்களைத் தரும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுகிறார்கள். பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் காண்பார்கள். குறிப்பாக இந்தக் காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மேலும் படிக்க | ஆத்ம காரகர் சூரியனின் ஆவணி மாதப் பெயர்ச்சி! கவனமா இருக்க வேண்டியது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News