சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம்: கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும்

Sani Vakra Peyarchi: சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 10, 2024, 03:22 PM IST
  • தனுசு ராசிக்காரர்கள் சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும்.
சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம்: கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் title=

Sani Vakra Peyarchi: சூரியனின் மகனான சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சனி அவர்களுக்கான பலன்களை அளிக்கிறார். சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒரே ராசியில் அவர் அதிக காலத்திற்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும். சனி பகவானின் ஒரு சிறிய மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

சனி தற்போது கும்ப ராசியில் உள்ளார். 2023 ஆம் ஆண்டின் துவகத்தில் அவர் இந்த ராசியில் பெயர்ச்சி ஆனார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியில் இருப்பார். எனினும், சனியின் இயக்கம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். ஜூன் 29, 2024 அன்று சனி கும்ப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைவார். சனியின் இந்த மாற்றம் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கபப்டுகின்றது. 

நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில் வக்ர நிலையில் இருப்பார். சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்கள் சனியின் வக்ர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வச் செழிப்பு வந்து சேரும். குறிப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு சனி அருள் பொழிவார். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், உயர் பதவி, சுக பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இவர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Astro: சுக்கிரன் அருளால்.. ‘இந்த’ ராசிகளுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும்!

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்கள் சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் சிறப்பான பலன் பெறுவார்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். சனியின் நிலை வணிக வர்க்கத்தினருக்கு பெரும் லாபத்தைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சனி பகவான் மிகவும் சுப பலன்களைத் தருவார். இந்த ராசிக்காரர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான சாதனைகளை செய்வீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் அருளால் தோஷங்கள் அனைத்தும் தீரும்.

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சனி வக்ர பெயர்ச்சி அடைந்து அனுகூலமான பலன்களைத் தருவார். இந்த ஆண்டு சனியின் அருளால் நீங்கள் செய்யும் பெரும்பாலான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். ஒப்பந்தத்தை முடிக்க வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். சனியின் அருளால் பண பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சமுதாயத்தில் கௌரவம் பெறுவீர்கள். துலாம் ராசிக்காரர்கள் சனியின் அருளால் பெரிதும் நன்மை அடைவார்கள். தொழில், வியாபாரம் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவீர்கள்.

தனுசு (Sagittarius) 

தனுசு ராசிக்காரர்கள் சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். சனி உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் தருவார். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான முழு வாய்ப்புகளையும் பெறுவீர்கள். நல்ல இடத்திலிருந்து வேலை வாய்ப்பு வரலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். சனியின் அருளால் பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து எளிதாக வெளிவருவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மௌனி அமாவாசை அன்று இந்த பொருட்களை தானம் செய்யுங்கள்! மகிழ்ச்சி உண்டாகும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News